கண்டெக்டருக்கு வந்த புது பிரச்னை.. பலா பழத்துக்கு ஏன் லக்கேஜ் டிக்கெட் போடலை.. வீடு தேடி வந்த நோட்டீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசுப்பேருந்துகளில் ஓட்டுநரை விட நடத்துநர் படும் பாடு சொல்லி மாளாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடாக வேலை பார்க்க நினைத்தாலும், பயணிகளால் ஒவ்வொரு நாளும் புது பிரச்னையை சந்திப்பார்கள். அதுவும் சரக்கு வாகனம் போல் நினைத்து கொண்டு சில பயணிகள், சாக்கு மூட்டையில் இருந்து, காய்கறி மூட்டை வரை அடைத்து வைத்து யாருக்கும் நிற்க இடமில்லாமல் பயணிக்கும் நிலையும் ஏற்படும். கூட்டமே இல்லாத பேருந்தில் லக்கேஜ் மட்டும் கூட்டமாக இருக்கும் காமெடிகளும் நடப்பதும் உண்டு.
பேருந்துகளில் எடுத்துச் செல்லப்படும் கோழி, ஆட்டுக்குட்டி போன்றவற்றுக்கு நடத்துநர்கள் டிக்கெட் வழங்கும் நிகழ்வுகள் ஒன்றிரண்டை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்வி பட்டிருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட பலா பழம் மற்றும் கேஸ் ஸ்டவ் போன்றவற்றுக்கு, லக்கேஜ் டிக்கெட் ஏன் வழங்கவில்லை என விளக்கம் கேட்டு இரண்டு நடத்துநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் கேஸ் ஸ்டவ்வுடன் பெண் ஒருவர், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறினார். அந்த அடுப்பு சுமார் அரை கிலோ மட்டுமே எடை இருக்கும். இதனால், நடத்துநர் லக்கேஜ் டிக்கெட் வாங்கவில்லை. இந்நிலையில், பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அந்தப் பெண் தனக்கான டிக்கெட் மட்டுமே வைத்துள்ளார் என்பதையும், கேஸ் ஸ்டவ்வுக்கு லக்கேஜ் டிக்கெட் பெறவில்லை என்பதையும் கண்டறிந்தார். இதனையடுத்து, பரிசோதகர் நடத்துநர் கோரக்நாத் கடமையை செய்யத் தவறிவிட்டார் எனக் கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்.
மற்றொரு சம்பவத்தில் சாதாரண பலா பழம் ஒரு நடத்துநரை பிரச்சினையில் கொண்டுவந்து விட்டுள்ளது. அரசிகேரீ என்ற பகுதியில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட பலா பழத்துடன், அரசுப் பேருந்தில் பயணித்தார். இங்கேயும் டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்தபோது, பலா பழத்திற்கு லக்கேஜ் டிக்கெட் வசூல் செய்யாத நடத்துநர் ரகுவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இந்த சின்ன பொருளுக்கு, அதுவும் பழத்துக்கு போய் டிக்கெட் வசூல் செய்ய முடியாது என்று ரகு எவ்வளவோ வாதாடியும், பரிசோதகர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஒழுங்கு நடவடிக்கை கோரும் நோட்டீஸ் வழங்கியுள்ளார். சாதாரண பலாப்பழத்திற்கா இந்த பிரச்னை என்றும் பலரும் வாயடைத்து போய் நின்றனர் பயணிகள்.
இதேபோன்று தெலங்கானாவில் கரீம் நகரில் சேவல் கோழியுடன் பேருந்தில் வந்த நபரிடம் லக்கேஜ் டிக்கெட் வசூல் செய்யப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இப்போ கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." ஆறு வருட காதல்.. 'காதலி' முடிவால்.. கோபம் தலைக்கேறிய இளைஞரின் பதற வைக்கும் செயல்
- திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மரணத்திற்கு பின் மறுபிறவி.. உருக்கமான முடிவு
- ஒரே ஒரு கிரிக்கெட் பந்தினால்.. ஒட்டுமொத்த ஊரிலும் வெடித்த கலவரம்.. புழுதி பறக்க நடந்த சண்டை
- என்னையா அவாயிட் பண்ற.. 5 பேரையும் உருதெரியாம அழிச்சிடுங்க.. எல்லாம் பண்ணிட்டு பெண் போட்ட டிராமா.. ஹார்ட் பீட்-ஐ எகிற வைக்கும் சம்பவம்
- ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!
- எனக்கு என் கள்ளக்காதல் முக்கியம்.. அதுக்காக எத்தனை உயிர் போனாலும் பரவா இல்ல.. வெறியோடு பெண் நடத்திய பயங்கரம்
- "புர்கா என்னோட உரிமை" கூச்சலுக்கு நடுவே..தனியாக ஓங்கி ஒலித்த உரிமைக்குரல்.. - வைரலாகும் வீடியோ..!
- கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!
- பசி எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும்.. அதுனால தான்.. 10 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச உணவளிக்கும் ஹோட்டல் உரிமையாளர்..!
- நண்பன் மனைவியை கல்யாணம் செய்த நபர்.. ‘இதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்’.. குவியும் வாழ்த்து..!