‘இந்தியாவில் 70 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பில், 3 மாநிலங்களில் உச்சம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2293 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 23,401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் இதுவரை 8,541 பேருக்கும், தமிழகத்தில் 8,002 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
- "ஆலையை திறக்கலாம்.. ஆனால் அதே சமயம்.." - ஆதரவு கொடுத்த டிரம்ப்!.. “நன்றி மகராசா!” - நெகிழும் எலன் மஸ்க்!
- 'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய 3-வது மாவட்டம்’...
- லேசான 'கொரோனா' அறிகுறி இருந்தா... வீட்டுல இருந்து இதை 'மட்டும்' செய்ங்க... மறுபடியும் 'பரிசோதனை' தேவையில்லை!
- இந்தியா இல்லன்னா 'இதை'... நெனைச்சு கூட 'பார்க்க' முடியாது... உலக சுகாதார நிறுவனம் 'எச்சரிக்கை'
- அவ்ளோ 'சீக்கிரம்' விடாது போல... 'பிறப்பிடமான' வுஹான் நகரில்... மீண்டும் 'தலைதூக்கிய' கொரோனா!
- 'ஊரடங்கு' நேரத்துல ரூல்ஸை... அதிகம் 'பிரேக்' பண்ணது இவங்க தானாம்... ஷாக் தகவல்!
- இதெல்லாம் எப்ப தான் முடியும்!? வெளியான ஆய்வு முடிவுகள்!.. ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!
- ரயிலில் வந்த தொழிலாளர்கள்!.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்!