'வீட்டுக்குள்ளேயே மாரத்தான் ஓட்டம்...' 'டைனிங்' ஹால்ல இருந்து 'பெட்' ரூமுக்கு ஓடினேன்...! எதுக்கு தெரியுமா? மொத்தம் 42 கிலோமீட்டர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொச்சியில் வங்கி ஊழியர் ஒருவர், கொரோனா விழிப்புணர்வுக்காக தன் வீட்டு அறையிலேயே சுமார் 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓடி சமூகவலைத்தளங்களில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியுள்ளது. பல்வேறு தரப்பு மக்கள் சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்தான விழிப்புணர்வுகளையும், இந்த குவாரன்டைன் நாட்களை எப்படி கழிப்பது என்பதை பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கேரளாவில் கொச்சி நகரத்தில் வாழ்ந்து வரும் சுரேஷ் குமார்(50) என்பவர் பெடரல் வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கு பெற்றிருந்த சுரேஷ் தற்போது தன்னுடைய வீட்டில் 42 கிலோமீட்டர் ஓடியுள்ளார்.
இது குறித்து கூறிய சுரேஷ், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் நமக்கு தேவை உடல் வலிமையையும், மன வலிமையும் ஆகும்.
இந்த விடுமுறை நாட்களில் நாம் உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். இதற்கு முன்பே தன் நிறைய மாரத்தான்களில் ஓடியதால் இந்த ஞாயிறு அன்று வீட்டிற்குள்ளாகவே ஓடலாம் என முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
காலை 10.30 மணியளவில் தன் ஓட்டத்தை தொடங்கியுள்ளார். வீட்டின் சாப்பிடும் அறையிலிருந்து படுக்கை அறைக்கு ஓடி, அங்கிருந்து மாறி மாறி ஓடியுள்ளார். இப்படி ஓடிய அவர் மதியம் 2.30 மணியளவில் 42 கிமீ-யை கடந்தார்.
மேலும் அவருடைய தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகள் கைதட்டி அவரை உற்சாகம் படுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த கொரோனா வைரஸை நாம் அனைவரும் வீட்டில் இருந்தும், தனித்திருந்தும் ஆரோக்கியத்துடன் இருந்தும் வெல்வோம் என கூறியுள்ளார் சுரேஷ் குமார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்