'30 வருஷம் பெண்ணாக வாழ்ந்த ஆண்...' '10 வருசமா குழந்தை இல்ல...' 'செக் பண்ணி பார்த்தப்போ அவங்க உடம்புல விந்தணு...' நம்ப முடியாத ஆச்சரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தா மருத்துவமனையில் முப்பது வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வந்தவர் பரிசோதனைக்கு பின் ஆண் என உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீர்பும் பகுதியில் குடியிருக்கும் 30 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக வந்துள்ளார். வயிற்று வலிக்கு சிகிச்சையளிக்கும் போது, அவர் டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் புற்றுநோய்க்கு உரிய சிகிச்சை அளித்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அனுபம் தத்தா மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சௌமேன் தாஸ் அப்பெண்ணின் உண்மையான மரபியல் அடையாளத்தை தற்போது கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய டாக்டர் அனுபம் தத்தா 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 30 வயதான இந்த பெண்ணிற்கு குரலில் இருந்து தொடங்கி, வளர்ந்த மார்பகங்கள், சாதாரண வெளிப்புற பிறப்புறுப்பு, எல்லாமே ஒரு பெண்ணின் தன்மைதான். இருப்பினும், கருப்பை மற்றும் கருப்பைகள் பிறந்ததிலிருந்தே இல்லாமல் இருந்தன. இதன் காரணமாக அப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டதில்லை.
மேலும் வயிற்று வலியோடு அப்பெண் மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது, நாங்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டோம். அப்போது அவளது உடலுக்குள் விந்தணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அதனால் அவருக்கு பயாப்ஸி நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து அவருக்கு டெஸ்டிகுலர் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது செமினோமா என்றும் அழைக்கப்படுகிறது' என தெரிவித்தார்.
மேலும் இந்த அரிதான நிலை சுமார் 22,000 பேர் ஒருவருக்கு காணப்படும் எனவும், அவரது உடம்பில் உள்ள பெண்ணுறுப்பு மருத்துவ ரீதியாக 'குருட்டு யோனி' எனக் குறிப்பிடப்படுகிறது. அவர் மரபியல் ரீதியாக ஒரு ஆண். ஆனால் பெண்களை போல வெளி தோற்றங்களை கொண்டுள்ளார். இது அவரது குரோமோசோம் நிரப்பு 'XY' மற்றும் 'XX' அல்ல. தற்போது, அவர் கீமோதெரபிக்கு பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
'மேலும் அவரது விந்தணுக்கள் உடலுக்குள் வளர்ச்சியடையாததால், டெஸ்டோஸ்டிரோன் சுரக்கவில்லை. மறுபுறம், அவரது பெண் ஹார்மோன்கள் அவளுக்கு ஒரு பெண்ணின் தோற்றத்தைக் கொடுத்தன' என்று டாக்டர் அனுபம் தத்தா கூறினார்.
திருமணமான அவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இத்தம்பதிகள் குழந்தைகளுக்காக பல முறை முயற்சித்தாலும் தோல்வியடைந்தது தெரியவந்தது. மேலும் நோயாளியின் இரண்டு தாய்வழி அத்தைகளுக்கும் கடந்த காலங்களில் ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது மருத்துவர்கள் நோயாளிக்கும் அவரது கணவருக்கும் ஆலோசனை வழங்கி வருவதாகவும், இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார் புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் அனுபம் தத்தா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்