'சினை மாட்டுக்கு' வெடி வைத்துவிட்டு 'தலைமறைவான நபர்...' '10 நாட்களுக்குப்' பிறகு போலீசார் சுற்றி வளைத்து 'கைது...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹிமாச்சலபிரதேசத்தில் சினை மாட்டுக்கு வெடித்த நபர் 10 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

ஹிமாச்சலபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜான்துதா பகுதியில் குர்திலால் என்பவர் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த பசு அந்த பகுதியில் கடந்த 25ம் தேதி மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது தீடிரென ஏதோ வெடிபொருள் வெடித்து மாட்டின் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மாடு கடந்த 10 நாட்களாக உணவு உண்ண முடியாமல் வேதனையில் தவித்தது. மாட்டின் நிலையை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் குர்திலால் பதிவிட்டதையடுத்து அது வைரலானது.

இதுகுறித்து குர்திலால் போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தையடுத்து குர்திலால் வீட்டருகே வசித்து வந்த நந்தலால் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் நந்தலால் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை கடந்த 10 நாட்களாக தேடி வந்தநிலையில், நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்