சிவன் வேடமிட்டு நடித்த நபர்.. மேடையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்த நபர் ஒருவர், மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வாசனை திரவிய தொழிலில் கால்பதித்த எலான் மஸ்க்.. விலையை கேட்டு ஷாக் ஆகிப்போன நெட்டிசன்கள்..!

வாழ்வில் மரணம் எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நிலையற்ற வாழ்க்கைக்கு சாட்சி சொல்லும் சம்பவங்களை நாம் நிறையவே பார்த்திருப்போம். அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் பலரையும் கண் கலங்க செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம், ஜான்பூரில் புகழ்பெற்ற ராம் லீலா நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், உள்ளூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடமிட்டு நடித்திருக்கிறார்.

ராம் லீலா

இவரை உள்ளூர் மக்கள் காப்பான் பாண்டே எனவும் அழைக்கின்றனர். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவன் வேடமிட்டு நடித்து வருகிறார். ஜான்பூரில் உள்ள பெலாசின் கிராமத்தில் நடைபெற்ற இந்த ராம் லீலா நாடகத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்துக்கொண்டிருந்த ராம் பிரசாத் திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறார். நாடகத்தில் சிவனுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வின் போது, ராம் பிரசாத் கீழே விழவே, அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் மற்றும் சக நடிகர்கள் உடனடியாக அவரை எழுப்பியிருக்கின்றனர்.

ஆனால், அவரிடம் எவ்வித சலனமும் இல்லாததால் பதறிப்போன மக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறவே, அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

சோகம்

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடும் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பலரையும் கலங்க செய்தது. இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த போதே ஒருவர் மாரடைப்பினால் மரணமடைந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | நிறைய பணம் கிடைக்கணும்னு பூஜை.. நம்பி போன 2 பெண்களுக்கு நடந்த விபரீதம்.. விசாரணையில் போலீசுக்கு வந்த சந்தேகம்..!

UTTARPRADESH, MAN, LORD SHIVA, RAMLILA STAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்