காதலுக்கு 'தடை' விதித்த தந்தை... மனமுடைந்த காதலன் காதலிக்கு செய்த 'கொடூரம்'... அதன் பின் நடந்த 'பயங்கரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉயிருக்கு உயிராகத் காதலித்த தன் காதலியின் தலையில் காதலன் சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபன்ஷு. இவர் ரதி பிரீத்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் டெல்லி காவல்துறையில் பணி நியமனம் பெற்று, பயிற்சியில் இருந்தபோது சந்தித்து காதலிக்கத் தொடங்கினர்.
கடந்த 2018-ம் ஆண்டு பயிற்சியை முடித்த பிரீத்திக்கு, பட்பர்கஞ்ச் தொழிலகப் பகுதியிலும், தீபன்ஷுவுக்கு, பஜன்புரா காவல்நிலையத்திலும் காவல் உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் கிடைத்தது
இந்த நிலையில், பிரீத்தியைத் திருமணம் செய்வது தொடர்பாக தனது தந்தையுடன் பிரீத்தியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் தீபன்ஷு. ஆனால் பிரீத்தியின் தந்தையோ மகளின் காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்; இதனால் காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினர்.
கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், தீபன்ஷு மனமுடைந்து காணப்பட்டார். அதற்கு மேல் பொறுக்க முடியாத தீபன், பிரீத்தி வழக்கமாக வந்து செல்லும் டெல்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அன்று இரவு 9.30 மணிக்கு பிரீத்தி ரயில் நிலையம் வந்திறங்கி வெளியில் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து 50 அடி துாரம் வெளியில் அவர் நடந்து சென்ற நிலையில், பின்னால் வந்த தீபன்ஷு திடீரென பிரீத்தியின் தலையில் தனது துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரீத்தி அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து தீபன் காரில் ஏறி தப்பிச் சென்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர். தீபன்ஷுவின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது கார் டெல்லியில் இருந்து வடக்கு நோக்கி ஹரியானா மாநிலத்திற்குள் சென்றது தெரியவந்தது.
போலீசார் தேடிச் சென்றபோது, ஹரியானா மாநிலம் கர்நல் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த காரில் தீபன்ஷு சடலமாகக் கிடந்தார். காருக்குள் இருந்தபடி தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தீபன்ஷு என்பது விசாரணையில் தெரியவந்தது. கொலை மற்றும் சந்தேக மரணம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவரை நம்பி குழந்தைகளை விட்டுவிட்டு, ‘மார்க்கெட் போன மனைவி’.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!
- ‘40 நிமிஷம் சுத்தி நின்னுகிட்டு..’.. பல்கலை., விழாவில் புகுந்து இளம் பெண்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர்கள்! - பரபரப்பு குற்றச்சாட்டு!
- ‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..!’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..!
- "வாந்தி எடுத்தது ஒரு குத்தமாய்யா..." 'விமானத்தை' 3 மணி நேரமாக கழுவிய ஊழியர்கள்... 'கொரோனா' பீதியில் சக 'பயணிகள்'...
- ‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்!
- தந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
- போதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- '56 வயது காதலனைக் கொன்ற 27 வயதான ஓரினச்சேர்க்கையாளர்'... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!... நடந்தது என்ன?
- ‘வாயில் நுரை’.. ‘அருகில் கிடந்த விஷம்’.. காவிரி ஆற்றங்கரையில் கிடந்த கார் டிரைவர், கல்லூரி மாணவி சடலம்..!
- ‘இப்போ உன்ன யாரு கல்யாணம் பண்றாங்கணு பாக்குறேன்’.. திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..!