கோவாக்சின் போட்டவங்க 'கொண்டாடுற' மாதிரி வந்துள்ள ஒரு 'கிரேட்' நியூஸ்...! - அட, இதுக்கு மேல என்னங்க வேணும்...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸிற்கு எதிராகவும், டெல்டா வகை கொரோனா பாதிப்பிற்கும் கோவாக்சின் சிறந்த வகையில் செயல்படுவதாக தி-லான்செட் என்ற மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் மீண்டும் உறுதியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து  கொரோனா வைரஸிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அதோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரம்பரிய, செயலிழந்த வைரஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் கோவாக்சின் மருந்தை உலக சுகாதார மையமும் ஏற்று கொண்டது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதோடு 'தி லான்செட்' என்ற மருத்துவ இதழ் கோவாக்சின் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் கொரோனா வைரஸிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சுமார் 77.8% செயல்திறன் வீதத்தைக் கொண்டிருப்பதும், டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சுமார் 65.2% பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை மேலும் உறுதிப்படுத்த சில ஆய்வுகள் அவசியம் எனவும் தி-லான்செட் பத்திரிக்கை கூறியுள்ளது.

குறிப்பாக கோவாக்சின், இரண்டு டோஸ்கள் கொடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வலுவான ஆன்டிபாடி எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாகவும், தடுப்பூசி தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் லான்செட் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

CORONAVIRUS, LANCET, COVAXIN, VACCINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்