'ஏன் சார்'...'எங்க பொண்ணெல்லாம் 'டாக்டர்' ஆக கூடாதா'?...பெண்ணிற்கு நடந்த கொடூரம்...'கதறும் தாய்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கியுள்ளது பழங்குடியின பெண் மருத்துவரின் தற்கொலை. ஆனால் இதனை 'தற்கொலை' என்று கடந்து விட முடியாது,அது 'கொலை' என்று தான் பதியப்பட வேண்டும்' என்கிறார்கள்,பயல் சல்மானிற்கு நீதி கேட்டு போராடும் உறவினர்கள்.
பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனை மும்பையின் பிரசித்தி பெற்ற மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளும்,பயல் சல்மான் தத்வி என்ற பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்கு மூன்று சீனியர் பெண் மருத்துவர்கள் தான் காரணம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இளங்கலை பட்டம் பெற்ற இவர், இடஒதிக்கீடு மூலம் முதுகலை படிப்பை மேற்கொள்ள வந்த போது தான் பயலிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவரது தந்தை 'படிப்பை தொடர்ந்த எனது மகளிர்க்கு கடந்த 6 மாதமாக எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் அதன் பின்பு தான் எனது மகளிர்க்கு பல சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. சாதியின் பெயரால் எனது மகள் மிகவும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறாள்.இடஒதிக்கீடில் வந்தவள் தானே என மிகவும் தரக்குறைவாக எனது மகளை திட்டிருக்கிறார்கள். உடனே இதுகுறித்து பயலின் கணவர் சல்மானிடம் தெரிவிக்கப்பட்டது.அவர் நாம் இதனை கடந்து வர வேண்டும் என ஆறுதல் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய பயலின் தாய் அபேதா ''எனது மகள் என்னிடம் பேசும் போதெல்லாம் சீனியர் மருத்துவர்களான ஹேமா அஹுஜா, பக்தி மேஹர் மற்றும் அன்கிதா ஆகியோர் குறித்து கூறி கொண்டே இருப்பார்.அவர்கள் சாதி ரீதியாக என்னை மிகவும் தொந்தரவு செய்வதாகவும்,இதனால் நான் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே இது குறித்து புகார் அளித்தும் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,வெறும் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பி விட்டார்கள்.அவர்கள் மட்டும் அன்று நடவடிக்கை எடுத்திருந்தால் என்னுடைய மகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என வேதனையுடன் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மருத்துவமனை டீன் ரமேஷ் '`டாக்டர் பயல் சல்மானின் தாய் சொல்வதுபோல் எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை.அந்த துறை மாணவர்களுக்கும் இதுதொடர்பாக எதுவும் தெரிந்திருக்கவில்லை.இருப்பினும் ராகிங் தடுப்பு பிரிவு மூலம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி தீபக் ''குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
- 'ரம்மி' விளையாடி,விளையாடி இப்படி ஆகி போச்சே'... 'தம்பதியருக்கு' நிகழ்ந்த துயரம்!
- 'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'!
- 'எங்களுக்கு ஒண்ணுனா வந்து நிப்பா'.. தாய்-மகள் தற்கொலையில் திடீர் திருப்பம்.. கதறிய மாணவிகள்!
- 'இதெல்லாமா 'வாட்ஸ் அப்'ல அனுப்புறது' ...காண்டான 'மனைவி'... 'போலீஸ் வலையில் கணவன்'!
- “இவங்கதான் முதல் பெண்”!.. ‘சிறிய விமானத்தில் சென்று பெரியளவில் உலக சாதனை நிகழ்த்திய இந்திய பெண்’!..
- “தன் சாதுர்யத்தால் உயிர் தப்பிய நபர்”!.. ‘அந்த நபரை உரசியபடி சென்ற ரயில்’!.. பரபரப்பான சம்பவம்!
- 'காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்க'... 'வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ்'... இளைஞர் செய்த விபரீதம்!
- DISTURBING VIDEO: 'நிக்குற இடம் மறந்து போச்சா'...'செல்ஃபி' எடுக்க முயற்சித்தவரின்...'பரிதாப நிலை'!
- ‘அம்மா எந்திரிம்மா, வா கடைக்கு போவோம்’.. பெற்றோர் இறந்ததை அறியாத பிஞ்சு குழந்தை.. மனதை உருக்கும் சம்பவம்!