VIDEO: 'கம்பியூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கீங்க...' 'நல்ல இங்கிலிஷ் பேசுறீங்க...' அப்புறம் ஏன்மா உங்களுக்கு இந்த கஷ்டம்...? - 'வாழ்க்கை' எங்க கொண்டு வந்து விட்டுடுச்சு பார்த்தீங்களா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாரணாசியில் ஸ்வாதி என்ற பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தெரு வீதிகளில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

Advertising
>
Advertising

அவரைக் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக (BHU) மாணவர் அவ்னீஷ் எனும் மாணவர் விசாரித்தபோது பல அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவரிடம் உரையாடும் போது சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் ஸ்வாதிக்கு உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் கடந்த மூன்று வருடங்களாக அசி காட் பகுதியில் வாழ்ந்து வருகிறார். உள்ளூர்வாசிகள் கொடுக்கும் உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்குகிறார்.

ஸ்வாதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆவார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்பு தான் தெருவில் வசிக்க தொடங்கியுள்ளார்.

அவருக்கு குழந்தை பிறந்ததும், உடலின் வலது பக்கம் முற்றிலும் செயலிழந்து பக்கவாதம் வந்துள்ளது. அப்போது தான் அவள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். கடந்த மூன்று வருடங்களாக வாரணாசி மலைத் தொடர் தான் சரணாகதி என இருக்கிறார்.

ஸ்வாதியை சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கம்ப்யூட்டரை இயக்கவும், தட்டச்சு செய்வதற்கு வேறு மென்பொருளைப் பயன்படுத்தவும் செய்கிறார்.

தனக்கு யாரும் உதவி செய்ய தேவை இல்லை எனவும், வேலைதான் வேண்டும் என்றும் கூறியுள்ளார். சொந்த காலில் நின்று இந்த சமூகத்தில் வாழ்வதையே அவரது லட்சியமாக கொண்டுள்ளார்.

 

VARANASI, WOMEN, ROAD, COMPUTER SCIENCE, STROKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்