'கண்ணு முன்னால கணவர் இறப்பதை...' 'வீடியோ காலில் பார்த்த மனைவி...' 'நல்லா பேசிகிட்டு இருந்தப்போ திடீர்னு...' நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குடும்ப பொருளாதாரத்திற்காகவும், கணவரின் சிகிச்சைக்காகவும் வெளிநாட்டிற்கு சென்ற கேரள பெண், வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கையில், கண் முன்னே கணவர் இறந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கேரளத்தை சேர்ந்த பிஜுமோள் மற்றும் ஸ்ரீரிஜித் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக குடும்பத்திற்காக அரபு நாடுகளில் பணிபுரிந்த ஸ்ரீரிஜித் உடல்நலக் கோளாறால் கேரளம் திரும்பினார். சிகிச்சைக்குபின் தான் அவருக்கு எலும்பு புற்றுநோய் உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கணவரின் உடல்நலத்திற்காகவும், குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் பிஜுமோள் குடும்ப சுமையை தான் ஏற்க தயாரானார். வெளிநாடு செல்ல  ரூ. 3 லட்சம் கடன் வாங்கி கேரளத்தில் இருக்கும் ஒரு தரகருக்கு பணம் கொடுத்து துபாய் சென்றார்.

துபாயில் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான வேலை என நம்பி சென்றவருக்கு அங்கு மசாஜ் நிலையத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். மசாஜ் சென்டரில் பணிபுரிய விருப்பம் இல்லாத பிஜுமோள் மூன்று  நாள்களில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். அதன்பின் அவரை அனுப்பிவைத்த தரகரைத் தொடர்புகொள்ள முயன்றால் முடியவேயில்லை.

பிஜுமோள் துபாய்க்கு ஒரு மாத கால சுற்றுலா விசாவில் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிப்.16-ம் தேதியுடன் இவருடைய விசா முடிவடைந்ததுள்ளது. அங்கேயும் தங்க முடியாமல் கொரோனா ஊரடங்கால்  இந்தியாவும் வர இயலாமல் தவித்துள்ளார் பிஜுமோள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பிஜுமோலுக்கு இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி, அவருடைய திருமண நாளுக்கு முந்தைய நாள், கேரளத்திலிருந்த அவருடைய கணவருடன்  விடியோ அழைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த போதே, சக்கர நாற்காலியிலிருந்த கணவர் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

கணவரின் இறுதி சடங்குகளை பெருத்த அழுகையுடன் வீடியோ காலிலேயே நிறைவேற்றினார். தாயும் இன்றி தந்தையும் பறிகொடுத்த 3 பெண் குழந்தைகள் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.

பிஜுமோளின் நிலைமை பற்றி அறிய வந்ததும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமூக நலத் துறை அமைச்சர் ஷைலஜா எனப் பலரும் தலையிட்டனர். தூதரகமும் உதவிக்கு வந்து, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் பெற்று, வியாழக்கிழமை அவர் கேரளத்தில் கொச்சிக்குத் திரும்பினார் பிஜுமோள்

தற்போது பிஜுமோள் அவரது வீடு இருக்கும் பகுதியிலேயே முகாமில் தனித்துள்ளார். தனிமைக்காலம் முடிவடைந்த பின் தன் பிள்ளைகளை பார்க்க ஆவலாக உள்ளதாகவும், இக்கட்டான நேரத்தில் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியும்  தெரிவித்துள்ளார் பிஜுமோள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்