'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு கொரோனா நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவு விவரங்கள் குறித்து, கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஒரு கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக தெரிவித்துள்ளது. தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டால், அவர்களுக்கு கூடுதலாக வெண்டிலேட்டர் செலவையும் சேர்த்து ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா டெஸ்ட் செய்து, நோயை உறுதிப்படுத்த, ரூ.4,500, டெஸ்ட் கிட்டின் விலை ரூ.3,000, நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு, தினமும் ரூ.1,000 மதிப்புள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா நோயாளி வென்டிலேட்டர் வசதியுடன் ஐ.சி.யூ., வார்டுக்கு மாற்றப்பட்டால், நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 வரை கூடுதலாக செலவாகிறது.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உடை ஒன்றுக்கு ரூ.500 முதல் 600 வரை தேவைப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்குப் பிறகும், இந்த உடைகள் மாற்றப்படுகிறது. அணிந்த உடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அப்படி, ஐ.சி.யூ., வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், நாள் ஒன்றுக்கு, 200 பாதுகாப்பு உடைகள் தேவைப்படுகின்றன.
நோயாளிகளுக்கு நோய எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில் சத்தான உணவு வகைகள், சக்தி கொடுக்கும் பானங்கள் என அடிக்கடி கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு நோயாளிக்கு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசே மேற்கொள்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை!?'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா!... இதயத்தை நொறுக்கும் சோகம்!
- ‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’!
- சென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது?.. எங்கே அதிகம்? இடங்களின் பட்டியல் வெளியீடு..!
- ‘ரெட்டைக் குழந்தைகளுக்கு‘ வைக்கப்பட்ட ‘செம்ம டைமிங்’ பெயர்கள்.. ‘தரமான’ சம்பவம்!
- 'ஐரோப்பாவில் இருந்து வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!'... பலியானவர்களில் 95 சதவீதம் பேர் இவர்களா?... உலக சுகாதார அமைப்பு பரபரப்பு தகவல்!
- மேலும் '102 பேருக்கு' பாதிப்பு... 'தமிழகத்தில்' கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்... 'மொத்த' எண்ணிக்கை இதுதான்!
- ‘கொரோனா சிகிச்சை வார்டில்’... ‘அறிமுகம் செய்யப்பட்ட ரோபோக்கள்’... ‘பெயர் உள்பட வெளியான தகவல்’!
- ‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..!
- 'கொரோனா பரவலுக்கு இது தான் காரணமா?'... டெல்லி நிஜாமுதீன் சம்பவம் குறித்து!... அமெரிக்கா பரபரப்பு கருத்து!
- ‘அதிலிருந்து எல்லாம் கொரோனா பரவாது’... ‘அதற்கு ஆதாரம் இல்ல’... 'சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!