'அட்ரஸ்' மாற்றி சடலத்தை அனுப்பிய 'மருத்துவமனை...' 'சோகத்தில்' உருக்குலைந்துபோன 'குடும்பம்...' அதன்பின்னர் நடந்த 'வேறலெவல் ட்விஸ்ட்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, கொரோனா நெகட்டிவ் வந்த குடும்பத்தாரிடம் கொண்டு சேர்த்த அரசு மருத்துவமனையால் பெரும் குழுப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் உடலை உயிரோடு சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் வீட்டிற்குக் கொண்டு சேர்த்த அவலத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த தேவ்ராம் என்பவர் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இவருக்குப் பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.

அதே வேளையில் தேவ்ராமிற்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் இருந்துள்ளதால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தேவ்ராம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, அந்த மருத்துவமனையில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள், தேவ்ராம் வீட்டிற்குக் தவறுதலாக கொண்டு சேர்த்தனர். கொரோனா உயிரிழப்பு என்பதால் உடல் முழுவதும் துணி சுற்றப்பட்டிருந்தது.

உடலைப் பார்த்த தேவ்ராம் குடும்பத்தார் மன வேதனையோடு கதறி அழுது இறுதிச் சடங்கை முடித்து சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று தங்கள் குடும்ப வழக்கப்படி எரித்துள்ளனர். இதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவ்ராம் குடும்பத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அதிர்ந்துபோன குடும்பத்தார், மருத்துவமனை சென்று விசாரித்தபோது தேவ்ராம் உயிரோடு இருப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் வேறு ஒருவரின் உடலை தேவ்ராம் என தவறான முகவரிக்குக் கொண்டு சேர்த்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கு அப்பகுதி மக்களை  எரிச்சலடையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்