'ஜூலையில் பள்ளிக்கூடங்களை திறக்கலாம்...' 'ஆனால் ஒவ்வொரு கிளாஸ்லயும்...' எந்தெந்த பகுதிகளில் திறக்கலாம்...? மத்திய அரசுக்கு குழு பரிந்துரை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது மற்றும் இயங்கும் முறைகள் குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகளை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலம் செல்ல செல்ல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பகுதிகளில் மட்டும் பள்ளிகள் இயக்கலாம் என்ற அறிவுரையை வழங்கியுள்ளது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு.
மேலும் இந்த வருட கல்வியாண்டு தொடங்க உள்ள சூழலில், 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வில் குறிப்பிட்டுள்ளவை என்னவென்றால், ஒவ்வொரு வகுப்பிலும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களை மட்டுமே அனுமதிக்கலாம் என்றும், தனி மனித இடைவெளி பராமரித்து பள்ளிகளை ஷிப்டு முறையில் இயக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. முதல் 7-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை நிலைமை சீராகும் வரை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் கண்டிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் அனைத்து வித முன்னெச்சரிக்கைகளுடன் மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் கூட்டங்கள், விழாக்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கூறும்போது, 'தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது இறுதி முடிவுகள் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் இருந்து ஒப்புதல் வந்த பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்கள் பொதுவானதாக இருக்கும் எனவும் அதன்படி மாநில அரசுகள் தங்களது பாதிப்பை பொறுத்து சொந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொள்ள முடியும் என்ற முக்கிய குறிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அத இப்போ பண்ணாதீங்க’.. டிரம்ப்-க்கு நேரடியாக ‘எச்சரிக்கை’ விடுத்த முக்கிய நபர்.. பரபரப்பை கிளப்பும் ஊரடங்கு விவகாரம்..!
- 'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....
- 'தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை'.. தமிழக அரசு 'அறிவிப்பு!'.. குதூகல சரவெடியில் குழந்தைகள்!
- ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் இது ஃப்ரீ’.. தமிழக அரசு அசத்தல்..!