'சிறுமி உடலை நரி சாப்ட்ருந்துச்சு...' 'காதலன் கொன்னுட்டதா ஃபர்ஸ்ட் சொன்னாங்க...' விசாரணையில கெடச்ச ட்விஸ்ட்...' அப்புறம் தான் கொலைக்காரன் யாருன்னு கண்டு புடிச்சோம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிராவில் குடும்பத்திற்கு பிடிக்காதவரை காதலித்து வந்ததால் 16 வயது சிறுமியை சொந்த அண்ணனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நந்தேடு மாவட்டத்தில் டெக்லூர் தாலுகாவில் உள்ள தமகானில் 16 வயது சிறுமி ஜூன் 20-ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். அதையடுத்து ஜூன் 22 அன்று நாந்தேட் போலீசார் சிறுமியின் உடலை அக்கிராமத்தின் அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல் சிறிது அழுகியும், நரிகள் மற்றும் நாய்களால் சிறிது சாப்பிடப்பட்டிருந்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், சிறுமி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அந்த இளைஞர் தான் இப்படி தன் குழந்தையை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இளைஞரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. மேலும் சிறுமி காணாமல் போன பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் பதிவு செய்யாததால் போலீசார் தங்களது விசாரணையை குடும்பத்தார் பக்கமும் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (24.06.2020) அன்று  சிறுமியின் சகோதரர் அனில் சூர்யவன்ஷி (26) என்பவரை அழைத்து விசாரித்த போது, பயத்தில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விசாரணையில், 'என் தங்கை வேறொரு இளைஞருடன் பழகுவது எங்கள் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் நான் அவளை கொன்றுவிட்டு காட்டுப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் வீசிவிட்டேன்' என ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து நாந்தேட் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்  துவாரகதாஸ் சிக்காலிகர் கூறும்போது, 'இது உண்மையில் கௌரவ கொலை வழக்கு. இவ்வழக்கு தொடர்பாக நாங்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் குற்றவாளிகளை ஜூன் 30 வரை ரிமாண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்