டேய் தம்பிங்களா எங்கடா போறீங்க...? 'சீனா ராணுவத்தை ஒரு கை பார்க்கலாம்னு போறோம் சார்...' சீன எல்லைக்கு கிளம்பிய சிறுவர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எல்லையில் அத்துமீற முயற்சித்த சீன ராணுவத்திற்கு பாடம் கற்பிப்பதற்கு புறப்பட்ட சிறுவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகவே சீன ராணுவம் இந்தியா சீனா எல்லை பகுதியான லடாக்கில் அத்துமீறி தாக்கியதில்,  20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில், எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் இந்தியாவில் சீனா நிறுவனம், சீன உணவுகள் மற்றும் சீனப் பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சில இடங்களில் மக்கள் சீனா டிவி, செல்போன் ஆகியவற்றை உடைத்து வருகின்றனர்.

இதனை மிஞ்சும் வகையில், தற்போது உத்தரபிரதேசம், அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சிறுவர்கள் ஊர்வலமாக செல்கையில், மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக இந்தியா சீன எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களை ஒரு கை பார்த்து விடலாம் என போகிறோம் என்று கூறினர். சிறுவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அறிவுரை கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்