'சைக்கிள் அப்புறம் கூட வாங்கிக்கலாம்...' 'சிறுக சிறுக சேமித்த பணத்தை...' கொரோனா நிவாரண நிதிக்காக அள்ளிக் கொடுத்த சிறுவன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

கொரோனாவின் விபரீதம் என்ன என்றே அறிந்து கொள்ள முடியாத வயதில் பெரியவர்களை விட குழந்தைகள் அதன் வீரியத்தை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதன்படியே சில குழந்தைகள் தங்களின் உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறோம் என்று அமைச்சர்களை அல்லது அரசு அதிகாரிகளை சந்தித்து வழங்குகுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் ஆந்திராவில் உள்ள விஜயவாடா மாவட்டத்தில் நடந்துள்ளது.

கடந்த ஏழாம் தேதி அன்று  நான்கு வயது சிறுவன் ஹேமந்த் சிறுக சிறுக சேமித்த தனது உண்டியல் பணம்  971 ரூபாயை கொரோனா வைரஸிற்கு எதிரான போருக்கு தனது பங்களிப்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மனதார அள்ளிக் கொடுத்துள்ளார். அந்தத் தொகை மிகக் குறைவுதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தை அள்ளிக் கொடுக்க நினைத்த அந்த மனம் மிகுந்த பாராட்டுக்குரியது ஆகும்.

இந்த நிதியை வழங்குவதற்காக ஹேமந்த்,  ததேபள்ளியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கடராமையாவை சந்தித்துள்ளார். அப்போது அமைச்சர் அந்தச் சிறுவனின் செயலை வெகுவாகப் பாராட்டினார்.  மேலும் சைக்கிள் வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த பணத்தை வழங்கியதை ஊக்குவிக்கும் விதமாக விரைவில் தனது சொந்த செலவில் சைக்கிளை வாங்கி பரிசளிப்பேன் என்று ஹேமந்த்திடம் அமைச்சர் பெர்னி வெங்கடராமையா உறுதியளித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்