"இந்தியாவுல கொரோனா 4வது அலை இந்த மாசத்துல வரலாம்".. அலெர்ட்டா இருக்க சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒட்டுமொத்த மனித குலத்தையே கொரோனா என்னும் பெருந்தொற்று அசைத்துப் பார்த்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹானில் உள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை  பார்த்து விக்கித்துப் போன உலகம், சுதாரிப்பதற்குள் கண்டங்களை தாண்டி பரவத் துவங்கியது கொரோனா. கொத்து கொத்தாக மக்கள் மரணிப்பதை பதைபதைப்புடன் இன்றுமே பார்க்க வேண்டிய சூழல் தான் இருக்கிறது. இருப்பினும் தடுப்பூசி வந்த பிறகுதான் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Advertising
>
Advertising

"நம்பிக்கை எல்லாம் போய்டுச்சு..என்ன நடக்குதுன்னே தெர்ல"..உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்த இந்திய மாணவி.. வைரல் வீடியோ.!

4வது அலை

இந்நிலையில், கோவிட் வைரஸில் ஏற்படும் திரிபு காரணமாக கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் உருவாகின. அந்த வகையில், இந்தியாவில் ஜூன் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என கணித்துள்ளனர் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள்.

MedRxiv எனப்படும் இணையதளத்தில் சுகாதார அறிவியல் குறித்த ஆய்வாளர்களின் இந்த கட்டுரை கடந்த 24 ஆம் தேதி வெளியாகியது. அந்த அறிக்கையின்படி ஆகஸ்டு 15 - 31 ஆம் தேதிக்குள் நான்காவது அலை உச்சத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில்,"இந்தியாவில் கோவிட்-19 இன் நான்காவது அலையானது ஆரம்ப தரவு கிடைத்த, அதாவது ஜனவரி 30, 2020 ஆம் தேதியிலிருந்து 936 நாட்களுக்குப் பிறகு ஏற்படும். எனவே, நான்காவது அலை 22 ஜூன் 2022 இல் தொடங்கி, 23 ஆகஸ்ட் 2022 அன்று அதன் உச்சத்தை அடைந்து 24 அன்று முடிவடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நான்காவது அலை எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது வைரஸில் ஏற்படும் வேரியண்ட்களின் தன்மை, கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களின் நிலையை பொறுத்தது என விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா எண்ணிக்கை 8,013 ஆக பதிவானது. கடந்த இரண்டு மாதங்களில் 10,000 க்கு குறைவாக நேற்று தான் கொரோனா எண்ணிக்கை பதிவாகி இருந்தது. மொத்தமாக இதுவரையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.29 கோடியாகவும்  கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"உயிரோட இருக்கணும்னா.. இதை செய்யுங்க" ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் சொன்ன அட்வைஸ்..!

COVID WAVE, INDIA, IIT KANPUR, கொரோனா 4வது அலை, ஆராய்ச்சியாளர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்