இந்த 3 விஷயம்... கொரோனா கிட்ட இருந்து 'உங்கள' பாதுகாக்கும்: இந்திய மருத்துவ கவுன்சில்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் மருந்து கண்டறியவில்லை என்பதால் தற்போது தடுப்பு வழிமுறைகளை மட்டுமே நம்ப வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவிடம் நம்மை பாதுகாத்து கொள்ள உதவும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிமுறைகளை கொண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே கொரோனா வைரசிடம் இருந்து உயிர்களை காக்கும் என்று தெரிவித்து உள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கொரோனா அறிகுறிகளை கொண்ட அனைத்து தனிநபர்களுக்கும் பரிசோதனைக்கான வசதி பரவலாக கிடைக்க செய்வது கட்டாயம் ஆகும். கொரோனா பாதிப்பு கட்டுப்படுவதற்கு, தொற்றுடன் தொடர்புடையோரை கண்டறியும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவற்றில், ஆர்.டி.-பி.சி.ஆர்., ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இசை மழையில் நீங்கள் நனையத் தயாரா?".. தாவரங்களை நாற்காலியில் அமர்த்தி இசை கச்சேரி!.. என்ன காரணம்?
- "எப்படி வண்டிய எடுக்குறீங்கனு பாக்குறேன்!"..'தாய்ப்பாசத்தால் இளைஞர் செய்த காரியம்!'.. கைகலப்பு சம்பவம்.. வீடியோ!
- மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது!.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- 'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!
- ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- 'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'?... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- திருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!