'உனக்கு 'நோய்' எல்லாம் இல்ல யா'... 'நீ எங்க 'சாமி' யா!'... குறைபாடென நினைக்கும் மனிதரை 'கொண்டாடும்' கிராம மக்கள்!... யார் இந்த 'அதிசய பிறவி?'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இயல்புக்கு மாறாக வித்தியாசமான முகத்தை உடைய பூசாரியை கடவுளின் அவதாரமாக கருதி கிராம மக்கள் வழிபாடு செய்கின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜெஹான்பூரில் வசித்து வருபவர் தாபுல் மிஷ்ரா. அவர் பிறக்கும் போதே அதிகமான முக வளர்ச்சியுடன் பிறந்தவர். தன்னுடைய முகத்தில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்காக அவர் நிறைய செலவு செய்துள்ளார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. அதற்காக விரக்தி அடையாமல், பிச்சை எடுப்பதை அவமானமாகக் கருதி, உள்ளூரில் உள்ள ஒரு கோயிலில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அவர் குறைபாடாக கருதும் வித்தியாசமான முகத்தை, அவரது கிராம மக்கள் குறைபாடாக நினைக்கவில்லை. மாறாக, அவரை கடவுளின் அவதாரமாகவும், ஆசிர்வாதமாகவும் நினைக்கிறார்கள்.

மேலும், மிஷ்ராவுக்கு பார்வை குறைபாடு உள்ள மனைவியும், 3 குழந்தைகளும் உள்ள நிலையில், வாழ்வின் எத்தகைய சூழலிலும் பிச்சை எடுத்து வாழக் கூடாது என்கின்ற அவரது கொள்கை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

VILLAGE, PEOPLE, MAN, WORSHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்