முதலில் குஷ்பு... அடுத்து விஜயசாந்தி... பாஜகவை நோக்கி படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானாவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி, காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ள நிலையில், நாளை பாஜகவில் இணைவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் எம்.பியும், நடிகையுமான விஜயசாந்தி நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு இவர் பாஜவின் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் முதலாக பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, அப்போது பாஜகவின் மகளிரணி செயலாளராக பதவி வகித்தார். அதன் பிறகு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைந்து தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டங்களில் இணைந்தார்.
இதன்பின்னர் டிஆர்எஸ் கட்சியின் சார்பாக 2009 முதல் 2014 வரை மேதக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
பின்னர் 2014 முதல் காங்கிரஸ் கட்சியின் இணைந்து பணியாற்றிவந்தார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார் விஜயசாந்தி.
தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் இரண்டாவது பெரிய நட்சத்திர நடிகை விஜயசாந்தி.
இதற்கு முன்பாக தமிழகத்தில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சமீபத்தில்தான் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அர்ஜுனமூர்த்தி ராஜினாமா செய்துள்ள நிலையில்...' 'பிஜேபி அறிவுசார் பிரிவு மாநில தலைவராக...' - பிரபல ஜோதிடர் நியமனம்...!
- 10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..!
- 'திடீரென மாற்றப்பட்ட ட்விட்டர் ப்ரொஃபைல்'... 'கட்சி குறித்து அறிவித்த போதே பதவி'... 'பலருக்கும் எழுந்த கேள்வி'... யார் இந்த அர்ஜுன மூர்த்தி?
- 'யாரா இருந்தாலும் சரி...' - கனடா பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த 'நடிகை' குஷ்பு!
- 'நான் பாஜகவில் சேர போகிறேனா'?... 'வரும் சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு என்ன'?... மு.க அழகிரி பரபரப்பு பேட்டி!
- "தோல்வி அடைய விரும்பவில்லை!!!"... 'உணர்ச்சிபூர்வமான பேச்சால் கண்கலங்கிய நிர்வாகிகள்?!!'... 'கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அதிரடி!'
- நோட்டாவுக்கு அதிக ‘ஓட்டு’ விழுந்தால் தேர்தலை ரத்து செய்யணும்.. பாஜக மூத்த தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு..!
- “ரொம்ப நாள் கேப்க்கு அப்றம் சென்னை வந்திருக்கேன்!.. இத பத்தி பேசாம எப்படி?” .. பாஜக தலைவர் ‘அமித் ஷா’ அதிரடி!
- VIDEO: "என்னை தோற்கடிக்க பல கோடி செலவு பண்ணாங்க!".. "நான் பெறாத பிள்ளைகள் எனக்காக"... கண்ணீர் விட்டு அழுத நடிகர் டி.ராஜேந்தர்!
- 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமித்ஷாவின் வருகை'... 'அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை'... இவங்க இரண்டு பேரையும் சந்திப்பாரா?