"என் காதலிக்கு எப்படி மெசேஜ் பண்ணுவ?" நண்பனைக் கொன்ற இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவராக இருந்தவர் நவீன். இவரும் அதே கல்லூரியில், ஒரே வகுப்பில் பயின்று வரும் ஹரிஹர கிருஷ்ணா என்ற மாணவனும் நண்பர்கள் ஆவார்.
Also Read | முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!
இதனிடையே அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை நவீன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருமே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுக்கொண்ட சூழலில் இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து அந்த மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்த அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில், தன்னை விட்டு காதலி பிரிந்து சென்ற போதும் அவருக்கு தொடர்ந்து செல்போனில் கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் நவீன். இதுபற்றி அந்த மாணவி தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணாவிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணா தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பன் நவீனை ஹரிஹர கிருஷ்ணா கொலை செய்திருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹரிஹர கிருஷ்ணாவும் போலீசில் சரணடைந்திருந்தார்.
இந்த நிலையில், தனது நண்பரை கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணா, இது தொடர்பாக தற்போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சமயத்தில் தனியாக இருந்த ஹரிஹர கிருஷ்ணா, நவீனை தனது வீட்டிற்கு அழைத்து பின்னர் அவரை கொண்டு செல்லும் வழியில் மது அருந்த முயற்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து யாரும் இல்லாத இடத்தில் அவரை அழைத்துச் சென்ற ஹரிஹர கிருஷ்ணா, உங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு விட்டது என்றும் நான் காதலிக்கும் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்றும் நவீனிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கேட்டு நவீன் ஹரிஹர கிருஷ்ணாவை அடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்தில் இருந்த ஹரிஹர கிருஷ்ணாவும் அவரை திருப்பி அடிக்க தொடங்கியுள்ளார். இறுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனின் தலையை அவர் வெட்டி உள்ள சூழலில் பின்னர் இதயத்தையும் வெளியே எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நவீனின் விரல்களையும் துண்டித்த ஹரிஹர கிருஷ்ணா, அவரது உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்கு அருகே இழுத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு சில தினங்கள் கழித்து தன்னுடைய தந்தையிடமும் இந்த சம்பவத்தை ஹரிஹர கிருஷ்ணா தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசில் சரணடையுமாறும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நவீனை கொன்றது பற்றி தன்னுடைய காதலி மற்றும் நண்பன் ஒருவரிடமும் ஹரிஹர கிருஷ்ணா தெரிவித்த சூழலில் இதனை கேட்டு அவர்கள் பயந்து போனதாகவும் உடனடியாக போலீசில் சரணடைய சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இரண்டு மாதங்கள் முன்பே கத்தியை வாங்கி வைத்திருந்த ஹரிஹர கிருஷ்ணா, நவீனை கொலை செய்யவும் திட்டம் போட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- துபாயில் காதலித்த காதலனை.. சொந்த ஊருக்கு அழைத்த இளம்பெண்.. நம்பி விமானத்தில் வந்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
- தனது காதலிக்கு மெசேஜ் செய்து.. தொல்லை கொடுத்த நண்பனை கொன்று.. "இதயத்தை வெளியே எடுத்து".. குலைநடுங்க வைத்த இளைஞர்!!
- திடீர்னு ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான மணப்பெண்.. திருமணம் நடக்குமான்னு கலங்கி நின்ன பெண்வீட்டார்.. தாலியுடன் என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளை..!
- பாகிஸ்தானில் இருந்து காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த இளம்பெண்... ஒரே வாட்சப் காலில் மாறிப்போன வாழ்க்கை..
- நம்பி காதலிச்ச பொண்ணு.. ரூ.10 லட்சத்துக்காக கொன்ற வாலிபர்.? தமிழகத்தில் சோகம்..!!
- இந்தியாவையே பதற வைத்த ஷ்ரத்தா வழக்கு.. அஃப்தாப்பின் கோபத்துக்கு காரணம் இதுதான்.. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸ்..!
- காரில் எரிந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர்.. வேறோரு ஊரில் சிக்கிய திகிலூட்டும் பின்னணி!!
- நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகிட்டு திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சோகம்!!
- வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம்.. முதல்வருக்கு சென்ற கோரிக்கை..!
- சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!