லிப்ட் கேட்ட மர்ம நபர்.. நம்பி பைக்கில் ஏத்திய நபருக்கு காத்திருந்த துயரம்.. "அவரோட மனைவி போன் மூலம் தெரிய வந்த உண்மை"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள பொப்பரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாஹேப். இவரது மனைவி பெயர் இமாம்பி.

Advertising
>
Advertising

Also Read | 6 பேர் உயிரைக் காப்பாற்றிய 'Alexa'.. நள்ளிரவில் கொடுத்த எச்சரிக்கை.. அப்படி என்ன செஞ்சுது?

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த வாரம் மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு இமாம்பி சென்றுள்ளார்.

தொடர்ந்து, மனைவியை அழைத்து வருவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன், ஷேக் ஜமாலும் மகளின் வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது பாணாபுரம் என்னும் பகுதி அருகே மர்ம நபர் ஒருவர், ஜமாலிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றிக் கொண்டு வழக்கம் போல சென்று கொண்டிருந்துள்ளார் ஜமால்.

அந்த சமயத்தில், திடீரென பின்னால் இருந்த நபர், கையில் மறைத்து வைத்திருந்த ஊசியை எடுத்து ஜமால் உடலில் குத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முதுகில் ஏதோ குத்தியதை உணர்ந்த ஜமால், வண்டியை நிறுத்தி உள்ளார். ஆனால், அதற்குள் லிப்ட் கேட்டு ஏறிய நபர் அங்கிருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ஜமால் அங்கே மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜமால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது, ஜமால் மனைவியான இமாம்பி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

இமாம்பிக்கும், ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விஷயம் ஜமாலுக்கு தெரிய வந்த நிலையில், இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதன் பெயரில், ஜமால் மற்றும் அவரது மனைவி இமாம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஜமாலை கொலை செய்ய இமாம்பி மற்றும் மோகன் ஆகியோர் திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் மூலம், ஊசி ஒன்றையும் வாங்கி உள்ளார் மோகன். பின்னர் தாங்கள் திட்டம் போட்டது போல, இமாம்பியை அழைக்க ஜமால் செல்லும் போது, அவரிடம் லிப்ட் கேட்டு ஊசியை செலுத்தவும் முடிவு செய்துள்ளார் மோகன். சில நண்பர்கள் உதவியுடன் இதனை செயல்படுத்திய மோகன், பின்னர் விசாரணையில் சிக்கி உள்ளார்.

முன்னதாக, இமாம்பி மொபைல் போனை சோதித்த போது, மோகனுடன் அடிக்கடி பேசுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், இமாம்பி, மோகன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "இது தான் அப்பா, பொண்ணு Goals போல".. ஒரே நாளில் மகளுடன் வழக்கறிஞராக பதிவு செய்த தந்தை.. நெகிழ வைத்த பின்னணி!!

TELANGANA, UNKNOWN MAN, LIFT, BIKE, INJECT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்