'எம்.எல்.ஏ'க்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி'...'வைரலாகும் வீடியோ'... சர்ச்சையில் மாட்டிய எம்.எல்.ஏ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ ஒருவருக்கு பள்ளி மாணவி சாப்பாடு ஊட்டி விடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டம் கான்பூர் பகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாடிகொண்டா ராஜையா. இவர் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த தாடிகொண்டா,சமீபத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் மத்திய விருந்து வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ தாடிகொண்டாவிற்கு மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டிவிட்டார்.
நாற்காலியில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏவுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டிவிட, அவருக்கு அருகில் மாணவர் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தார். இந்த வீடியோ வைரலானதையடுத்து அது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய எம்.எல்.ஏ தாடிகொண்டா , மாணவர்களின் அழைப்பின் பெயரில் தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறியுள்ளார். மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவி, தாமாக முன்வந்து சாப்பாட்டை ஊட்டி விட்டார். அவரை எனது மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக்கொண்டதாக கூறிய அவர், இது தெரியாமல் பலர் என்னை விமர்சனம் செய்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கையில் தட்டு...வயிற்றில் பசி.. கண்களில் ஏக்கம்'.. பெண் குழந்தையின் வாழ்வில் ஒளி ஏற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- 'அவங்கள உயிரோட எரிச்சதுனால.. நான் பயந்துட்டேன்.. அதனால'.. பரபரப்பை கிளப்பிய தாசில்தாரின் பகீர் முடிவு!
- 'எரித்துக் கொல்லப்பட்ட பெண் தாசில்தார்'.. பெட்ரோலுடன் பேச்சுவார்த்தைக்கு போன நபர் செய்த பரபரப்பு காரியம்!
- 'பட்டுச்சேலை'யுடன் பறந்து பறந்து சண்டை.. 'ரத்த' களரியான கல்யாண வீடு.. வைரல் வீடியோ!
- ‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
- 'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!
- Watch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்!
- ‘ஹாஸ்பிட்டலில் திடீரென பற்றிய தீ’... ‘பதறிய பெற்றோர்’... ‘பிறந்து சில மாதமே ஆன’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்’!
- 'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..