'யாருக்கும் டவுட் வராம...' 'கச்சிதமா காரியத்தை முடிச்சிட்டு இருந்த எடத்துல வச்சிடுவார்...' - ஒரு வருசமா தொடர்ச்சியா நடந்திருக்கு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானாவில் வீட்டில் சமையல் செய்பவர் தன் முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து ஒரு வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள வனஸ்தாலிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் காலனியில் வசிக்கும் குடும்பத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார் லக்‌ஷ்மி நாராயணன். இவர் தன் முதலாளியின் சகோதரி அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்புவதை கவனித்து வந்ததோடு மட்டுமல்லாமல் எப்போதும் டெபிட் கார்டு வீட்டில் இருந்த மேசையில் இருப்பதையும் அதன் அட்டையில் எழுதப்பட்டுள்ள பின் நம்பரையும் கவனித்து வைத்துள்ளார்.

அதன் பின் ஒருநாள் வீட்டில் இருந்த டெபிட் கார்டை எடுத்துச் சென்று கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமையல்காரர் சுமார் 2.7 லட்சம் பணத்தை எடுத்து அனுபவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறை அதிகாரிகள், 'கடந்த டிசம்பர் மாதம் பணம் அனுப்பிய அமெரிக்க சகோதரி இந்தியாவிற்கு வந்து பணப் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பெயரில் அளிக்கப்பட்ட புகாரை விசாரணை செய்ததில், அவர்கள் வீட்டில் சமையல் பணிபுரிந்த லக்‌ஷ்மி நாராயணன் பலமுறை டெபிட் கார்டை எடுத்துச் சென்று வனஸ்தாலிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் எழாதவண்ணம் பின்னர், அந்த கார்டை அதே இடத்தில் சென்று வைத்துள்ளார்' எனக் தெரிவித்துள்ளனர்.

அவ்வீட்டில் இருப்பவர்களுக்கு பணம் திருட்டு ஆரம்பிக்கும் போது சமையல்காரர் மீது எவ்வித சந்தேகமும் எழவில்லை எனவும், அதன்பின் சமையல்காரர் லக்‌ஷ்மி நாராயணன் அவர்களின் வீட்டில் சமையல் செய்வதை நிறுத்தியுள்ளார்.

தப்பித்து சென்ற சமையல்காரர் லக்‌ஷ்மி நாராயணனை பெங்களூரில் வைத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்