'ப்ளீஸ்...! உங்க போட்டோவ வாட்ஸப் பண்ணுங்க...' 'போலிஸ்ன்னு உதவி பண்ண போய்...' - பெண் தொழிலதிபருக்கு நடந்த உபத்திரவம் ...'
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் பெண் தொழிலதிபருக்கு போனில் அடிக்கடி புகைப்படம் அனுப்பி தொல்லை செய்ததாக தெலுங்கானா மாநில சிறப்பு காவல்துறை (டி.எஸ்.எஸ்.பி) கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பி.வீராபாபு(32) என்பவர் யூசுப்குடா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி வீரபாபு பணிபுரியும் காவல் நிலையத்தில் இறக்குவிடுமாறு அப்பகுதி வழியே வந்த காரில் லிப்ட் கேட்டுள்ளார்.
பி.வீராபாபு ஒரு போலீஸ்காரர் என்பதால் காரில் இருந்த பெண்மணி அவருக்கு ஒரு லிப்ட் கொடுத்துள்ளார். மேலும் காரில் செல்லும் போது இருவரும் தங்களின் தொடர்பு எண்களை மாற்றி கொண்டுள்ளனர். பெண் தொழிலதிபரிடம் எதிர்காலத்தில் எந்தவொரு உதவிக்கும் அவரை அழைக்கலாம் என்று வீரபாபு கூறியுள்ளார்.
இதன் பிறகு தான் அந்த பெண் தொழிலதிபருக்கு தலைவலி தொடங்கியுள்ளது. காவலர் வீரபாபு பெண் தொழிலதிபருக்கு நேரம் காலம் பார்க்காமல் வீடியோ கால் பண்ணத்தொடங்கியுள்ளார். மேலும் வாட்ஸ்அப்பில், குறுஞ்செய்திகளையும் படங்களையும் அனுப்பியுள்ளார்.
இதனை விரும்பாத பெண் தொழிலதிபர் இம்மாதிரியான செயல்களை நிறுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டார், ஆனால் வீரபாபு அவரின் பேச்சைக் கேட்காமல் தன்னுடைய செய்கையை தொடர்ந்துள்ளார். மேலும் பெண் தொழிலதிபருடைய புகைப்படங்களையும் கேட்டு தொல்லை செய்துள்ளார்
இதனால் கோபமடைந்த அந்த பெண்மணி போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார், மேலும் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹைதராபாத் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் ஐ.பி.எஸ், 'சட்டத்திற்கு மேல் யாரும் இங்கு பெரிது இல்லை. 12 பட்டாலியன் டி.எஸ்.எஸ்.பி.யின் கான்ஸ்டபிள் வீரபாபு ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சீருடையில் இருக்கும் இத்தகைய குற்றவாளிகளால் நாங்கள் வெட்கி தலைகுனிகின்றோம். எந்தவொரு குற்றச்செயலையும் எந்தவொரு நபரிடமிருந்து பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காவலரால் ஏதேனும் தவறான நடத்தை ஏற்பட்டால் 9490616555 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கவும்' என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விபத்துக்குள்ளான கார் மீதே மோதி... மேலே 'கவிழ்ந்த' லாரி... அப்பளம் போல நொறுங்கிய காரால்.. 'சம்பவ' இடத்திலேயே நிகழ்ந்த துயரம்!
- "துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு!".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்! கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்!
- சென்னை அருகே ‘பயங்கரம்’!! - ரவுடிகளுடன் மோதல்.. ‘திமுக’ எம்.எல்.ஏ-வின் தந்தை நடந்திய ‘துப்பாக்கி சூடு’... படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி! - ‘அதிர்ச்சி’ சம்பவம்!
- “ஆசைவார்த்தை கூறி வன்கொடுமை!”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை!
- ஒரே ஒரு 'டைம்' மட்டும் பிளீஸ்... கண்டுகொள்ளாத 'வாலிபரால்' மாணவி எடுத்த விபரீத முடிவு...கடைசி 'வீடியோ'வால் அதிர்ச்சி!
- 'நைட் 11.30 மணி இருக்கும், அசந்து தூங்கிட்டு இருந்தேன்'... 'என் கைய பின்னாடி கட்டி'... விடிஞ்சதும் பாட்டி வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் ஓடி வந்த சிறுமி!
- நல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே!
- 14 வயது 'சிறுமி' எரித்துக்கொலை... செய்யப்பட்ட வழக்கில் விலகியது மர்மம்?... 'உறவினரை' கைது செய்த போலீஸ்!
- மாயமான '20 வயது' இளம்பெண்... 900 கி.மீ பயணம் செய்து 'விசாரணை' நடத்திய போலீசாருக்கு... காத்திருந்த ஷாக்... அதிலும் 'அந்த' விஷயம் தான் ஹைலைட்!
- ‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்!’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்!’ நடந்தது எப்படி?.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்!