‘அதிவேகத்தில் வந்த எம்.எல்.ஏ-வின் காரால்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘அடுத்து அவர் செய்த அதிரவைக்கும் காரியம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதி சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் கல்வகுர்தி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ஜெய்பால் யாதவ். இவர் தன்னுடைய இன்னோவா காரில் நேற்று இரவு ஹைதராபாத்திலிருந்து கல்வகுர்தியை நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய கார் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஜகநாத் (40) என்பவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜகநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தின்போது காருக்குள் இருந்த ஜெய்பால் யாதவ் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது விபத்து நடந்ததும், காயமடைந்தவருக்கு உதவாமல் ஜெய்பால் யாதவ் மற்றொரு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்குக் காரணம் எனக் கூறியுள்ள அப்பகுதி மக்கள் இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- சுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி!
- ‘லாரியை முந்த முயன்ற’.. ‘வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து’.. ‘சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்’..
- ‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..
- ‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’
- ‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- 'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'!
- அடேங்கப்பா! ரூபாய் 17.6 லட்சத்திற்கு 'ஏலம்' போன 'லட்டு'.. அப்படி என்ன விசேஷம்?
- 'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'!