"ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாகவே, இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் பழக்கம, நம்மில் பலரிடையே அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க, வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழலும் உருவானது.
இதன் காரணமாக, ஆன்லைனில் ஆர்டர் செய்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பழக்கத்தையும் மக்கள் அதிகரித்துக் கொண்டனர்.
ஆன்லைனில் பொருள் ஆர்டர் செய்யும் வழக்கம்
அது மட்டுமில்லாமல், வெளியே பயணம் செய்து, கடைகள் பலவற்றில் ஏறி, இறங்கி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதைக் காட்டிலும், வீட்டில் இருந்து கொண்டே உணவு, உடை உள்ளிட்ட மற்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது, நேரம் உள்ளிட்ட பல விஷயங்களை மிச்சப்படுத்துவதாகவும் பலரும் கருதினர். அதே வேளையில், இப்படி ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, வீட்டிற்கு வந்து சேரும் பொருட்கள் அப்படியே தலை கீழாக கூட இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டம், உட்னூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ஆன்லைனில் சுமார் 6,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
போனுக்கு பதிலா உள்ள இருந்தது..
இதனைத் தொடர்ந்து, அவர் ஆர்டர் செய்த சிறிது நாள் கழித்து, பார்சலும் வீடு தேடி வந்துள்ளது. ஆசை ஆசையாக தான் ஆர்டர் செய்த மொபைல் போன் உள்ளே இருக்கும் என்ற நம்பிக்கையில், பார்சலை திறந்து பார்த்த நபருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது, மொபைல் போனின் கவருக்குள் சார்ஜர் உள்ளிட்ட பொருட்களுடன் போன் இருக்க வேண்டிய இடத்தில் துணி துவைக்கும் சோப் ஒன்று இருந்துள்ளது.
இதனைக் கண்டதும் அந்த நபர் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார். கடந்த சில ஆண்டுகளில், இது போல விலை உயர்ந்த பொருட்கள் ஆர்டர் செய்யும் போது, அதற்கு பதிலாக கற்களோ, சோப் பவுடர்கள் போன்ற பொருட்களோ பார்சலாக வரும் செய்திகளை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதே போன்ற ஒரு நிகழ்வு, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபருக்கு தற்போது நடந்துள்ளது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திடமும் புகார் ஒன்றை அந்த இளைஞர் அளித்ததாக கூறப்படும் நிலையில், இணையத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதே போல, இணையத்தில் வந்த மாற்று ஆர்டர் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆர்டர் செஞ்சது சுகர் டெஸ்ட் பண்ற கருவி.. ஆனா, வீட்டுக்கு வந்த பார்சல்'ல இருந்தது.." ஓப்பன் செய்ததும் திகைத்து போன முதியவர்
- "பண்றத எல்லாம் பண்ணிட்டு முழிக்குறத பாரு.." போன் விளையாடி ஒன்னர லட்சத்துக்கு செலவு இழுத்து விட்டுட்டானே.. நொந்து போன பெற்றோர்கள்
- ஆன்லைனில் ஐபோன் ஆர்டர்.. வந்த பார்சலை திறந்த இளைஞர்.. உள்ள இருந்தத பாத்து ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டாரு
- 'அட கடவுளே'... 'கிரெடிட் கார்ட்ல EMI போட்டு வாங்கினேன்'... 'மொபைல் இருக்கும் என பார்சலை பிரித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- "ஆச ஆசையா 'ஆர்டர்' பண்ணி,... பார்சல 'ஓப்பன்' பண்ணி பாத்தா..." அட என்னய்யா 'இது'ன்னு... அரண்டு போன 'தம்பதி'!!!
- ஆச ஆசையா 'ஃபோன்' ஆர்டர் பண்ணி,,.. பார்சல 'ஓப்பன்' பண்ணதுல,,.. வாலிபருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
- "'ஆர்டர்' பண்ணது 'ஆப்பிள்' வாட்ச்... ஆனா அதுக்கு பதிலா வந்தது,,." 'அதிர்ச்சி'யில் உறைந்த 'பிரபல' இசையமைப்பாளர்,,.. 'கடும்' கோபத்துடன் போட்ட 'ட்வீட்'!!!
- ’ஆன் லைனில் ஆர்டர் செய்ததோ பன்னீர் மசாலா’... 'வந்ததோ, வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்'!