பாதாம், பிஸ்தா தான் சாப்பாடு.. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச Costly எருமை.. விலையை கேட்டாலே தலை சுத்துதே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானாவில் நடைபெற்ற எருமை திருவிழாவில் ஒருவர் தன்னுடைய கருடன் எனும் எருமையை அழைத்து வந்திருக்கிறார். இதனை பார்த்த மக்கள் கூட்டம் அப்படியே ஷாக் ஆகிப்போய் நின்றிருக்கிறது. அதன் உருவம் மட்டும் அல்லாது அதன் விலையும் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது.

Advertising
>
Advertising

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடைபெறுவது வழக்கம். இதில் விலை உயர்ந்த எருமைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் இந்த சதர் விழா பிரம்மண்டமாக நடைபெற்றிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றிருக்கின்றன. ஹைதராபாத்தை சேர்ந்த மது யாதவ் என்பவருடைய மேற்பார்வையில் இந்த விழா நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பங்குபெற செய்வதற்காகவே மது யாதவ் எருமைகளை வாங்கி தன்னுடைய பால் பண்ணையில் வளர்த்து வருகிறார். இந்த ஆண்டு சதர் விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது கருடன் எனும் எருமை. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் இருந்து ரூ.35 கோடி கொடுத்து இந்த 4 வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் மது யாதவ்.

பொதுவாக எருமைகளின் உயிரணுக்களின் தரத்திற்கு ஏற்ப அதன் விலை நிர்ணயிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த கருடன் என பெயரிடப்பட்டுள்ள எருமையின் ஒரு துளி உயிரணு 1200 ரூபாய் முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த எருமைக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி, கொண்டைக்கடலை, வெந்தய விதை, பீட்ரூட், வேர்க்கடலை, கடலைப்பருப்பு என சத்தான உணவுகளாக அளித்து வருகிறார்களாம். இந்த ஆண்டு சதர் திருவழாவிற்கு வந்த மக்கள், இந்த கருடன் எருமையை ஆர்வத்துடன் பார்த்து சென்றிருக்கின்றனர்.

 

KARUDAN, BUFFALO, SADAR, TELANGANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்