'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா ராஜ்பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 10 பேருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 10 பேரும் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில், அதனைத் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், '' தனக்குச் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அதில்  'நெகட்டிவ்' என வந்துள்ளது. மேலும் தனது கணவர், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கும் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளதாக'' ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்