VIDEO : "அய்யயோ, நான் வரலைங்க, நீங்க வேற ஆள பாருங்க"... 'கொரோனா'வால் உயிரிழந்தவர் சடலத்தை எடுத்த செல்ல மறுத்த 'டிராக்டர்' டிரைவர்... 'ஹீரோ'வாக களமிறங்கி, டிராக்டரை 'ஓட்டிய' டாக்டர்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானா மாநிலத்தின் பெட்டபள்ளி என்னும் மாவட்டத்தில் 45 வயது மருத்துவர் ஒருவர், கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த நபரை அடக்கம் செய்ய வேண்டி டிராக்டரில் வைத்து தானே ஓட்டிச் சென்ற சம்பவம் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

ஸ்ரீராம் என்ற மருத்துவர், தெலங்கானாவின் பெட்டபள்ளி என்னும் மாவட்டத்தில் கொரோனா தொற்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் அந்த மாவட்டத்தில் ஒரு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த தகவலை மருத்துவனை ஊழியர்கள் ஸ்ரீராமிடம் தெரிவித்தனர். அவரது உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டி நகராட்சி ஊழியர்கள் டிராக்டர் ஒன்றை வரவழைத்துள்ளனர்.

கொரோனா மூலம் உயிரிழந்தவரின் உடல் என்பதால் டிராக்டர் ஓட்டுநர் பயந்து போன நிலையில், மருத்துவ கண்காணிப்பு அதிகாரியான மருத்துவர் ஸ்ரீராம், டிராக்டரை சுமார் 3 கி.மீ வரை ஓட்டிச் சென்று, பின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து பேசிய ஸ்ரீராம், 'ஒரு மருத்துவ அதிகாரியாக என்னுடைய பணியைத் தான் நான் செய்தேன். அந்த நோயாளி இறந்து ஆறு மணி நேரம் ஆகி விட்டது. உடனடியாக ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதால் எனது பணியை நான் செய்தேன். 'நான் வார இறுதியில் விவசாயியாக செயல்பட கூடியவன். அதனால் டிராக்டர் ஓட்டுவதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் இந்த நடவடிக்கைக்கு சில அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்