'வீட்டுக்குள்ள போலீஸ் நுழைஞ்சிடுச்சு...' 'யோசிக்க நேரம் இல்ல...' 'வீட்ல கட்டுக்கட்டா பணம்..' 'எஸ்கேப் ஆக நோ சான்ஸ்...' 'நேரா கிச்சனுக்கு போய்...' - தாசில்தார் செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர் வெங்கட கவுடு. இவர் அங்குள்ள அரசு அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிகிறார்.

வெங்கட கவுடுவிடம் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள குவாரி அனுமதி வேண்டி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் 6 லட்சம் லஞ்சமாக தந்தால் காரியத்தை முடிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் உடனே அந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து புகாரினை பதிவு செய்த லஞ்சளாக கொடுத்து அனுப்பினர். பணத்தை  தாசில்தார் வீட்டுக்கு கொண்டு சென்று அவரிடம் கொடுத்துள்ளார். உடனே அந்த பணத்தை வீட்டினுள் அடுக்கியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர்னு உள்ளே நுழைந்தனர்.

போலிஸ் வந்ததை அறிந்துக்கொண்ட தாசில்தார் சிக்கிட்டோம், இனி தப்பிக்க வழியில்லை என நினைத்துள்ளார். உடனே சமையலறைக்கு சென்று வாங்கிய பணம் முழுவதையும் உடனடியாக தீவைத்து எரிக்க முயன்றுள்ளார்.

உள்ளே அதிரடியாக புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் எரித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சமையலறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த பணத்தை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து போலீசார் வெங்கட கவுடுவை உடனடியாக கைது செய்தனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்