‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் நாகார்ஜுன சாகர் கால்வாயில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்த கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 11 பேர் நேற்று இரவு சூர்யா பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு 2 கார்களில் திரும்பியுள்ளனர். அவர்கள் சக்கிராலா அருகே சென்றுகொண்டிருந்தபோது முதலில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த நாகர்ஜுன சாகர் கால்வாயில் விழுந்துள்ளது.
கால்வாயில் நீரின் வேகம் அதிக அளவில் இருந்ததால் விழுந்ததும் கார் அப்படியே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காருடன் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் தேடுவதில் சிக்கல் இருந்த நிலையில், இன்று காலை முதல் சூர்யா பேட்டை கலெக்டர் அமய்குமார் மற்றும் எம்எல்ஏ மல்லய்யா ஆகியோர் தலைமையில் காணாமல் போன 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..
- ‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..!
- 'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'!
- 'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!
- ‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- யாரு சாமி இவங்க?.. 500 பைக், 250 டிராக்டர், 21 கார்.. ஒரே நாள்ல '30 கோடி' ரூபாய்க்கு.. வாங்குன விவசாயிகள்!
- ‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’!