உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்த ஏழைகளுக்கு, 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.
இதையடுத்து மாணவி ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர்.
ஒரு பையில் ரூ.650 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைத்தனர். குறிப்பாக 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 200 கிராம் மிளகாய்ப் பொடி, 2 சோப்பு பார்கள் அந்தப் பையில் இடம்பெற்று இருந்தன.
முதற்கட்டமாக 200 பேருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி 200 பைகளில் உதவிப் பொருட்களை எடுத்துக்கொண்டு, செர்லிங்கம்பள்ளி என்ற பகுதிக்கு சென்றனர். போலீசார் உதவியுடன் அவற்றை வினியோகம் செய்தனர்.
அப்போது பலருக்கு உதவிப் பொருட்கள் கிடைக்கவில்லை. பலர் பசியால் வாடுவதும் தெரியவந்தது. இதைப் பார்த்து மனம் இரங்கிய மாணவி, மேலும் கூடுதலாக நிதி திரட்ட விரும்பினார். அவருக்கு பெற்றோரும் உதவினார்கள்.
அதன்படி இணையதளம் மூலம் நிதி திரட்ட முடிவு செய்தார். மாணவி ரித்தி, தான் செய்துவரும் உதவி குறித்து இணையதளத்தில் பதிவிட்டதுடன், உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தும் பேசினார்.
அவரது செயலை பாராட்டி உதவிகள் குவியத் தொடங்கின. 8 நாட்களில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை, நிதி எட்டியது. அதற்கு உதவிப் பொருட்கள் வாங்கி ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வினியோகம் செய்ததாக மாணவி ரித்தியின் பெற்றோரான ராம்குமார், சில்பா ஆகியோர் பெருமிதமாக தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '8 ஆற்றல் மிக்க மருந்துகள் ஆராய்ச்சியில்...' 'பயன்பாட்டிற்கு' வர, '18 மாதங்கள்' ஆகும்... 'அதுவரை இது ஒன்றுதான் வழி...'
- ‘அதெல்லாத்தையும் நாம கடந்துட்டோம்’... ‘ரெடியா இருங்க’... ‘இந்த மாதத்தில் இருந்தே’... ‘ட்ரம்பின் திகைப்பூட்டும் நம்பிக்கை’...!
- ஆயிரக்கணக்கில் சுற்றித்திரியும் வௌவால்கள்!.. கொரோனா அச்சத்தால்.. வத்தலகுண்டில் பரபரப்பு!
- ‘ஏன் சார் இத்தன நாளா பேட்டி தரல..?’.. கேள்வி எழுப்பிய நிருபர்.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன பதில்..!
- 'மாசம் 3,000 தான் சம்பளம்'... "இருந்தாலும் என்னால முடிஞ்ச உதவி"... "அந்த வெள்ளந்தி சிரிப்போட"... "இந்த மாதிரி சாமிங்க நெறய இருக்காங்க இங்க"!
- "பெர்மிஷன் தேவையில்ல... இன்ஃபர்மேஷனே போதும்!".. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- பிள்ளைங்க ‘சென்னையில’ தவிச்சிட்டு இருப்பாங்க.. ‘போலீசார் செய்த உதவி’.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்..!
- 'கொரோனா' கோரத்தால் கோஸ்ட் சிட்டியான 'நியூயார்க்'... 21ஆம் நூற்றாண்டின் 'ஹிரோஷிமா, நாகசாகி..'. 'நினைவு நகராக' மாறி வரும் 'கனவு நகரம்...'
- VIDEO: 'யாரும் தேவையில்ல... நானே பாத்துக்குறேன்!'... கொளுத்தும் வெயிலில்... வயதான தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்!.. என்ன நடந்தது?
- தமிழகத்தில் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் - பரபரப்பு தகவல் || இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது