சார், 'மைன்ட் வாய்ஸ்'னு நினைச்சு 'டிவி லைவ்'ல பேசிகிட்டு இருக்கீங்க...! 'மும்பை அட்டேக் குறித்து...' முதன்முறையாக 'ஒப்புதல்' அளித்த பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பாகிஸ்தானை சேர்ந்த செய்தி தொடர்பாளர் தீவிரவாதம் குறித்து பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்தினை ஒழிக்க பல நடவடிக்கைகளையும், அமைதி மாநாடுகளையும் நடத்தி வரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கட்சி செய்தி தொடர்பாளர் தீவிரவாதத்தைக் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பல கட்சிகளை சேர்ந்தவர்களை அழைத்து விவாதமேடை போன்ற நிகழ்ச்சியை நடத்தியது.

அப்படியொரு விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆளும் கட்சியான Tehreek-e-Insaf கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் சமத் யாகூப் கலந்து கொண்டுள்ளார்.

அந்த விவாதத்தின் போது Tehreek-e-Insaf கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் சமத் யாகூப், மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் தான் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், 'தீவிரவாதிகள் தீவிரவாதத் தாக்குதல் தொடுப்பதில் தவறு இல்லை. அவர்கள் தங்களின் மறுக்கப்படும் உரிமைக்காகவே போராடுகின்றனர்' என அதிர்ச்சிகரமான ஒப்புதல் வாக்குமூலம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அவர்கள் பாகிஸ்தான் அரசால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆப்கானில் தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஒடுக்குதல்களால் மக்கள் அவதியூற்று வரும் நிலையில் தீவிரவாதிகள் செய்து தவறு இல்லை என்பதை போன்ற ஒரு கூற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தான் தாலிபான்களுக்கு அளித்து வரும் ஆதரவு உலகில் தீவிரவாதத்தினை அழிக்க முடியாது என்பதற்கு சான்றாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்