பொண்ணு 'ஹெட்ஃபோன' காதுல மாட்டியிருந்துச்சு... அதான் 'சிறுத்தை' வந்தத கவனிக்கல... 'அசந்த' நேரத்தில் சிறுமிக்கு நடந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுத்திக்கு உட்பட்ட சுனாகான் பகுதியை சேர்ந்தவர் மம்தா. எட்டாம் வகுப்பு படித்து வரும் மம்தா, தனது வீட்டின் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

Advertising
Advertising

அப்போது அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை, சிறுமி மம்தாவை தாக்கி தூக்கி சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 'நாங்கள் சென்ற போது அந்த பகுதியில் ஹெட்போன் மற்றும் சீப்பு ஆகியவை கிடந்தது. அந்த சிறுமி ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் சிறுத்தை வந்ததை கவனிக்க முடியவில்லை. சிறுமியின் உடல் அருகிலிருந்த புதரில் மீட்கப்பட்டது' என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க இரண்டு கூண்டுகள் மற்றும் 7 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை வந்த நிலையில், கிராமத்தினர் அலாரம் ஒளி எழுப்பியதால் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் காட்டுக்குள் ஓடி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சிறுமியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த சிஉர்மியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்