'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..! பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8 வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 21 வயதான இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். பி.டெக் பட்டதாரியான இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் வந்த 15 வயது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பி.டெக் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளான். இதனால் மாணவி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அதற்குள் மாணவியை வெளியே தள்ளிவிட்டு அறையை உள்பக்கமாக பூட்டி சிறுவன் தப்பியுள்ளான். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கத்தியால் குத்திய சிறுவனை வீட்டுக்குள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன்அறைக்குள் இல்லை. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழே சிறுவன் காயங்களுடன் கிடந்துள்ளான். தப்பிப்பதற்காக 8 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் எதற்காக மாணவியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..!
- ‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..! மிரள வைத்த கல்லூரி மாணவி..!
- 'பானி பூரி வித்து'... 'பசியில் உறங்கி தவித்த இளம் வீரர்'... 'உலக சாதனை படைத்து அசத்தல்'... நெகிழ்ச்சியான சம்பவம்!
- திடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..! சோகத்தில் மூழ்கிய பள்ளி..!
- ‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'கடைய மூடிட்டு.. அதிக விலைக்கு விற்பனையா?'.. 'நள்ளிரவில் டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு நேர்ந்த கதி'!
- ‘ஒரு மாசமா தேடியும் கிடைக்காத அம்மா’.. ‘மகன் சொன்ன ஒரே ஒரு பதில்’.. மிரண்டு போன போலீஸ்..!
- 'நாடகம் ஆடியது உண்மைதான்'.. தாய், தந்தையரை தீர்த்து கட்டிய மகனின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
- சாலையோரம் அசந்து தூங்கிய பக்தர்கள் மீது மோதிய பேருந்து..! பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!