‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுப்பாக்கியை வைத்து டிக்டாக் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதாமாக் துப்பாக்கி குண்டு துளைத்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ அதிகாரி வீரேந்திர குமார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கேஷ்வ் (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். சம்வத்தன்று தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்த தாய் காயத்ரி இதற்கு மறுப்பு தெரிவித்து மகனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளார்.
நீண்ட நேரமாக தாயிடம் கெஞ்சி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி பதறி அடித்துக்கொண்டு கேஷவ் அறைக்கு சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கேஷவ் கிடந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது டிக்டாக் வீடியோ செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து இறந்தது தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொழைக்க வந்த இடத்துல...' 'வடமாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்!'... 'விசாரனையில் போலீஸ் அதிர்ச்சி'...
- ‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- VIDEO: அச்சு அசலா 'மைக்கேல் ஜாக்சன்' மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..! வைரல் வீடியோ..!
- ‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- ‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...
- நண்பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்!
- ‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..!