'இதுகூட தெரியாம'...'எதுக்கு 'பள்ளிக்கு' வர்ற'... தலைக்கேறிய கோபத்தில்...'ஆசிரியையின் கணவர்' செய்த செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா மாநிலம் பாலகிர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் செயல்பட்டு வரும் பள்ளியில்,  ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லட்சுமி மெகர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால் லட்சுமி மற்ற வகுப்புகளையும் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மற்ற வகுப்புகளை கவனித்து கொள்ளும் போது அவருடைய கணவர் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் லட்சுமியின் கணவர், மாணவர்களிடம் குடை ஒன்றை வரையுமாறு கூறியுள்ளார். அப்போது சில மாணவர்கள் அதனை சரிவர வரையவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்ட ஆசிரியை லட்சுமியின் கணவர், இதுகூட தெரியாமல் ஏன் பள்ளிக்கு வருகிறீர்கள் என, ஆத்திரத்தில் மாணவர்களை அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்க, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

SCHOOLSTUDENT, ODISHA, STUDENTS, THRASHES, DRAWING, BALANGIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்