'பசங்க கிளம்பிட்டாங்களான்னு கன்ஃபார்ம் பண்ணின அப்புறம்...' 'க்ளாஸ்ரூம் கதவை உள்பக்கமா லாக் பண்ணிட்டு...' ஆசிரியர் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிய பிறகு, வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் சுக்லா (49), லால்பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்றைக்கு காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுக்லா, பாடம் நடத்துவது உள்பட தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். வேலை நேரம் முடிந்த பின்னர் அலுவலக அறைக்குச் சென்ற தனது செல்ஃபோனை வைத்துள்ளார். இதனிடையே மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்த நிலையில், வகுப்பறைக்குச் சென்ற ஆசிரியர் சுக்லா, வகுப்பறைக்கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது நடவடிக்கைகளை உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் கவனிக்கத் தவறியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு, ஆசிரியர் சுக்லா வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கவனித்த பள்ளியின் வாட்ச்மேன், உடனடியாக பள்ளியின் நிர்வாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சுக்லா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
ஆனால், சில காலமாக தனக்கு தீராத வயிற்று வலி இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டதாக உடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொஞ்சம் நாளாகவே மனா உளைச்சலுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது ஆசிரியர் சுக்லா உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்