“ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாதது ஒரு பெரிய தப்பா”!.. ‘இரக்கமின்றி மாணவிக்கு கொடூரமான தண்டனை கொடுத்த ஆசிரியர்’! பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டு பாடம் எழுதாத மாணவியின் கன்னத்தில் 168 முறை மற்றொரு மாணவியை அடிக்க வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்ட்லா டவுணில் ஜவஹர் நவோதயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பள்ளிக்கு வீட்டு பாடம் செய்யாமல் வந்துள்ளார். இந்நிலையில், இதற்கு தண்டனையாக ஆசிரியர் மனேஜ் வர்மா அந்த மாணவியின் கன்னத்தில் ஆறு நாட்களுக்கு 14 சக மாணவிகள் இருமுறை அடிக்கும்படி சக மாணவியர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், 14 மாணவிகளும் அந்த மாணவியை மொத்தம் 168 முறை கன்னத்தில் அறைந்துள்ளனர். இதனையடுத்து, பள்ளியில் நடந்ததை தனது தந்தையிடம் அந்த மாணவி அழுதபடியே கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடமும், போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த்துள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் மனோஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, ஆசிரியர் மனோஜ் மீதான வழக்கு கடந்த திங்கட்கிழமை தண்ட்லா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் மனோஜை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MADHYA PRADESH, SCHOOL TEACHER, GIRL, PUNISHMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்