வயிற்றுக்குள் இருந்த டம்ளர்.. முதியவர் சொன்னதை கேட்டு ஆடிப் போன டாக்டர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிகார்: வயதான தாத்தா ஒருவர், ஒரு டம்ளரையே விழுங்கி விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertising
>
Advertising

மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக, மடிப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு, 55 வயது முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிசைக்காக அங்கு அந்த முதியவரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், குடல் பகுதியில் ஏதோ பெரிய பொருள் அடைத்துக் கொண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பொருளை எண்ட்டோஸ்கோபி மூலம் வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்தும்  இயலாமல் போனது.

வயிற்றுக்குள் டம்ளர்

இதனையடுத்து,  அறுவைச் சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுக்க மருத்துவர் முகமதுல் ஹாசன் தலைமையிலான மருத்துவக்குழு முடிவு செய்தது. அதன்படி அறுவைச் சிகிச்சை செய்து உள்ளே பார்த்த போது, அந்த முதியவரின் வயிற்றில் ஒரு டம்ளர் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த டம்ளரை வெளியில் எடுத்த மருத்துவர்கள், இது பற்றி அந்த முதியவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் எப்படி அந்த டம்ளர் முதியவரின் வயிற்றுக்குள் சென்றது என விசாரித்தனர்.

முதியவரின் குடும்பத்தினர்

முதியவரின் குடும்பத்தார் கூறியதாவது,  "ஒருநாள் டீ குடிக்கும் போது டீ டம்ளரை அந்த முதியவர் விழுங்கி விட்டதாகக்" கூறினர்ஆனால் அவர்கள் கூறியதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காரணம் உணவுக்குழல் பகுதி மிகவும் குறுகலானது. அதில் டம்ளர் போன்ற பெரிய பொருட்கள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது மருத்துவர்களின் கருத்து. ஆனால் அந்த முதியவரின் குடும்பத்தாரோ எப்படிக் கேட்டாலும் சொன்னதையே திரும்ப திரும்ப கூறியுள்ளனர்.  இதனால்,  மருத்துவர்கள், உண்மையைக் கேட்டு அவர்களை வற்புறுத்தவில்லை.

குழப்பம் அடைந்த மருத்துவர்கள்

மருத்துவ உலகின் கூற்றுப்படி, அவரது வயிற்றுக்குள் அந்த டம்ளர் சென்றிருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த முதியவர் தனது ஆசனவாய் வழியாக அந்த டம்ளரை குடல் பகுதிக்குள் திணித்திருக்க வேண்டும். அது உண்மையெனும் பட்சத்தில் அந்த முதியவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி மருத்துவர்களுக்கே தெரியவில்லை.  குடல் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அந்த முதியவர் பூரணமாக குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் முகமதுல் ஹாசன் கூறியதாவது, "சிகிச்சை முடிந்து முதியவர் சுயநினைவுடன் இருக்கிறார்.  அவரிடம் வயிற்றுக்குள் எப்படி டம்ளர் சென்றது எனக் கேட்டால், அவரும் டீ குடிக்கும் போது விழுங்கி விட்டதாகவே கூறுகிறார்" என்றார்.

TEA GLASS, 55 YEAR OLD MEN, DOCTORS, BIHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்