'அன்று தாத்தா கைய விட்டு போச்சு'... 'இன்று பேரனின் கைக்கு வர போகுதா'?... 'ஏர் இந்தியா யாருக்கு'... வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாக முயன்றுவருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை கடன் சிக்கலால் காரணமாக யாரும் வாங்க முன்வராமலும் இருந்தனர்.
மேலும் பொது முடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமானச் சேவை பாதிப்பில் ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால் அதன் வருவாயில் பெரும் சரிவு காணப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு முடுக்கி விட்டது. கையேடு இறுதி ஏல விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்திய மத்திய அரசு, செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவித்தது.
இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து. இந்நிலையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதிகாரப் பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த தகவலை மணி கண்ட்ரோல் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 1932-ம் ஆண்டு ஜே.ஆர்.டி டாடாவால் ஆரம்பிக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு கடந்த 1953-ம் ஆண்டு அரசுடைமையாக்கியது. தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விமான நிறுவனத்தை டாடா மீண்டும் கைப்பற்றுகிறது.
இதற்கிடையே விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. ஏர் இந்தியா தனியார்மயமாவது குறித்து முடிவு எடுத்த பிறகு இதுகுறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்’ என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தாத்தா ஆரம்பித்த 'ஏர் இந்தியா'... 'இப்போ பேரன் கைக்கு போக போகுதா'?... அதிரடியாக களமிறங்கிய 'டாடா'!
- கடைசி நேரத்தில் 10,000 அடி பறந்து... விபத்துக்கான 'காரணம்' இதுதான்... முதல்கட்ட தகவல் அறிக்கை வெளியானது!
- 'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...
- 'இன்னும் 15 நாளில் நடக்க இருந்த சந்தோசம்'... 'ரொம்ப நாள் ஆசைப்பட்டது இதுக்கு தான்'... 'மொத்தமா நொறுங்கி போச்சே'... துணை விமானியின் உருகவைக்கும் பக்கங்கள்!
- 'நெஞ்சை உலுக்கிய கோர விபத்து'... 'பிரமை பிடித்தது போல இருந்த 3 வயது குழந்தை'... திக் திக் நிமிடங்கள்!
- 'பேக் டு ஹோம்'... 'மனதை நொறுக்கும் கடைசி பேஸ்புக் பதிவு'... 'மனைவி, மகளுடன் மகிழ்ச்சியோடு கிளம்பியவருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்'...
- 5 வருஷம் 'சம்பளமில்லா' விடுமுறை... 50% அலவன்ஸ் கட் எல்லாம் உண்டு... ஆனா யாரையும் 'வேலையை' விட்டு தூக்க மாட்டோம்!
- 5 ஆண்டுகளுக்கு 'சம்பளம்' இல்லா விடுமுறை?... அதிர்ச்சியில் 'ஆழ்ந்த' ஊழியர்கள்!
- "வரேனு சொன்னதும் அப்பாவுக்கு பேச்சே வரல!".. 250 இந்தியர்களுடன் யுகேவில் இருந்து பறந்த ஏர் இந்தியா விமானம்! இந்தியாவில் இருந்தும் தொடங்கிய சேவைகள்!
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...