வஉசி , வேலு நாச்சியார், பாரதி அலங்கார ஊர்திகள் நிராகரிப்பா? கொதித்துப் போன கனிமொழி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது என எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

குடியரசு தின விழாவையொட்டி வரும் 26-ஆம் தேதி புது டெல்லியில்  பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும்.  அப்போது  இந்தியாவில்  உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம்.  தமிழக அரசு சார்பில் பங்கேற்கும் அலங்கார வாகன  ஊர்திக்கு  ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது.

முதல்வர் ஐயா.. எங்கள பிளஸ் 2 எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்க.. சிரித்துக் கொண்டே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்

 

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக ஊர்திகள் மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. அதற்கு விதிமுறைகள் காரணமாக சொல்லப்பட்டிருந்தது.

மத்திய அரசின் செயலை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ எம்பி கனிமொழி மத்திய அரசின் செயலை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு பரிமாறிய மாமியார்.. மிரண்டு போன மாப்பிள்ளை!

குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும், இதை பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுத வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாககி உள்ளது. மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAMILNADU, REPUBLIC DAY PARADE, MP, KANIMOZHI MP, குடியரசு தின விழா, கனிமொழி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்