32 மணி நேரத்தில்.. 1857 கிலோ மீட்டர்.. காசி வரை பயணம் செய்து திரும்பி பாக்க வெச்ச தமிழக தம்பதி!!.. சுவாரஸ்ய பின்னணி
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
Also Read | விரைவில் கே எல் ராகுலுக்கு திருமணம்?.. வெளியான அசத்தல் தகவல்.. வைரல் ஆக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!
அதன் ஒரு பகுதியாக, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வைத்து கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்த தொடக்க விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்திருந்தார். டிசம்பர் 16ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் செய்துள்ள சாதனை தொடர்பான செய்தி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இருசக்கர மோட்டார் வாகனத்தில் பார்வையிட்டு வரும் தம்பதியர் தான் ஓசூரை சேர்ந்த ராமலட்சுமி மற்றும் ராஜன். இவர்கள் நேபாளம் செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள காசி தமிழ் சங்கமத்தை காண வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், ஓசூரில் இருந்து வாரணாசிக்கு இரு சக்கர மோட்டார் வாகனத்திலும் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். ஓசூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர்கள் இருவரும் இடையில் உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தை சேர்த்து, சரியாக 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காசிக்கும் வந்து சேர்த்துள்ளனர் ராமலட்சுமி மற்றும் ராஜன் தம்பதியர்.
இந்த பயணம் தங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் என்றும் சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல என்றும் ராமலட்சுமி மற்றும் ராஜன் ஆகியோர் கூறியுள்ளனர். அதே போல, காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு குறித்து தமிழகத்தில் இருக்கும் போது கூட தங்களால் இத்தனை விஷயங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒருவழியா கெடச்சுருச்சு".. தொலைஞ்சு போன TTF வாசன் பைக்.. பல போராட்டத்துக்கு அப்புறம் கெடச்சது எப்படி?
- "என் பைக் தொலைஞ்சு போச்சு, Pray பண்ணுங்க".. லடாக் போன TTF வாசன் பகிர்ந்த வீடியோ!!.. பரபரப்பு பின்னணி!!
- "அட, இது காணாம போன நம்ம பைக் ஆச்சே".. ஓனரை ஓவர்டேக் பண்ணி பெட்ரோல் போட்ட திருடர்கள்.. சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. 😅
- லிப்ட் கேட்ட மர்ம நபர்.. நம்பி பைக்கில் ஏத்திய நபருக்கு காத்திருந்த துயரம்.. "அவரோட மனைவி போன் மூலம் தெரிய வந்த உண்மை"
- "எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆகிடுச்சு".. 8 மூட்டையில் 10 ரூபாய் நாணயங்கள்.. வாயடைத்து போன பைக் ஷோரூம் ஊழியர்கள்
- "எதுக்கு பைக்கை திருடுன?".. போலீசாரின் கேள்விக்கு இளைஞர் சொன்ன பதில்.. ஒரு நிமிஷம் எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க..!
- "ஏங்க இந்த அவசரம்?".. அதிவேகத்தில் நெருங்கிய ரயில்.. அந்த நேரம் பார்த்து டிராக்கில் சிக்கிய பைக்.. IAS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!
- இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?
- ஒரே ஒரு Airpod-க்காக.. 7,000 கி.மீ தூரம் பறந்த இளைஞர்.. "செலவு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலயாம்.." காரணம் அறிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்
- அசைஞ்சுக்கிட்டே இருந்த சீட்.. கீழ இறங்கி பார்த்ததும் தெறிச்சு ஓடிய டிரைவர்.. ஆத்தாடி.. இதுல உக்காந்தா இவ்ளோ தூரம் வந்தாரு..?