தல தோனிக்கு வாழ்த்து சொன்ன தளபதி ஸ்டாலின்.. ஃபேன்ஸ் மாதிரி ஆவலுடன் இருக்கும் தமிழக முதல்வர்.. வைரல் ட்வீட்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "3 வருசமா Students யாரும் வரல.. சம்பளம் மட்டும் எதுக்கு??.." ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!

2004 ஆம் ஆண்டு, இந்திய அணிக்காக ஆட ஆரம்பித்த தோனி, 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி ஏராளமான சாதனைகளை படைத்திருந்தார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி, 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் அணிக்காக வென்று கொடுத்து, அசத்தலான கேப்டனாகவும் வலம் வந்தார்.

வாழ்த்தும் பிரபலங்கள்

தோனியின் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி ஏராளமான சாதனைகளை செய்து நம்பர் 1 அணியாகவும் திகழ்ந்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பெரிய பங்களிப்பை அளித்துள்ள தோனி, கேப்டன்சியில் மட்டுமில்லாமல், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ஆகவும் செயல்பட்டு வந்தார்.

தனது அசத்தலான திறனால், ஏராளமான ரசிகர்கள் படையை சம்பாதித்து வைத்துள்ள தோனி, இன்று (07.07.2022) தனது 41 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார். இவருக்கு கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முதல்வர் ட்வீட்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. உங்களின் இணையற்ற சாதனைகள், கிராமப்புறங்களில் இருந்து வரும் மில்லியன் கணக்கிலான இளைஞர்களுக்கு தங்களின் கனவுகளை தொடர வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சென்னை'ல பாக்கணும்..

எங்களின் சொந்த மண்ணில் (சென்னை) நீங்கள் மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறவில்லை.

தோனியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காண ரசிகர்களும் ஆர்வமாக இருப்பது போல, முதல்வர் ஸ்டாலினும் அதனைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது.." 10 வருஷமா துடைப்பம் வித்த காசு.. 100 வயசு'லயும் சபாஷ் போட வைத்த முதியவர்

CM MK STALIN, TAMILNADU CM MK STALIN WISHES DHONI BIRTHDAY, MS DHONI, TAMILNADU CM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்