'தமிழிசை ஆகிய நான்'.. பதவியேற்புக்கு பிறகு தந்தை காலில் விழுந்து ஆசி பெற்ற தமிழிசை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சென்னை மருத்துவ பிரிவு செயலாளரும் தமிழக பாஜக தலைவருமான பல பதவிகளை வகித்த தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த அறிவிப்பு வெளியான பிறகு பாஜக தலைவர் மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார் தமிழிசை. இதனை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், தனது பதவியேற்புக்கு பின்னர், தனது தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து தமிழிசை ஆசி பெற்றார். தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை என்பதும் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்