இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2. ஒரே ஆண்டில் 9 மருத்துவக்கல்லூரிகள் என்பது வரலாற்று சாதனை; முதல்வர் பழனிசாமியின் நிர்வாக திறமைக்கு இது சான்று என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தனது மகன் தோற்றதற்கான காரணத்தை கூறி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர்விட்டு அழுது புலம்பி இருக்கிறார்.

4. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.

5. பிராய்லர் கோழியை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்காக தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6. ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, வருகிற 29ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7. தென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகர் அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8.  விவசாயிகளுக்கு கைபேசி, வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

9. தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும் ட்விட்டரில் கணக்குகள் ஏதும் இல்லை என இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

10. மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பாஜக கண்ட தோல்வி அரசியல் சாசன தினத்தில் கிடைத்த பெரிய மரியாதை; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்