இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. கமலுடன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், “அது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு, கட்சி தொடங்கிய பின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.

2. குழந்தைகளை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக அவருடைய 2 பெண் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3. 2021ஆம் ஆண்டு தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

4. லால்குடி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

5. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

6. பகலிரவு ஆட்டமான இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

7. பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

8. ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து 6ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி மற்றும் தெலுங்கு அல்லது உருது மொழிகளில் ஒன்று கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

9. சிரியாவில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

10. சென்னை அயனாவரத்தில் சொத்து தகராறு காரணமாக மாமியாரைக் கடத்திய மருமகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

11. சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது முறையாக தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்.

SRILANKA, CRICKET, GOTABAYARAJAPAKSA, MAHINDARAJAPAKSA, NITYANANDA, CHINA, WORLDCUP, GOLD, MANUBHAKER, CHENNAI, TEAMINDIA, INDVSWI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்