இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. கோவாவில் இன்று நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவருக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

2. இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்ச அதிபராகியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

3. கமல் - ரஜினி இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என மநீம உயர்நிலைக்குழு உறுப்பினரான ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. மேலும் இந்தத் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

5. அசாம் மாநிலத்தைப் போல நாடு முழுவதும் தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

6. திண்டுக்கல் செங்கட்டாம்பட்டி அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

7. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2019ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதுக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா தேர்வு செய்துள்ளது.

8. நாகை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் தனது மகளைத் தீவைத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. சபரிமலை கோயில் தொடர்பாக கேரள அரசு தனிப்பட்ட சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

10. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11. சென்னை ஜெம் மருத்துவமனையில் நடந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தைக்கு தனது ஒரு பகுதி கல்லீரலை மகள் தானமாக வழங்கியுள்ளார்.

12. தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் தானும் ரஜினியும் கூறியுள்ளதாக மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

13. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்துவர்களின் புனித யாத்திரைக்கான உதவித்தொகை 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்